147 ஆண்டு வரலாற்றில்... முதல் இந்திய வீரர் ஆஸ்திரேலிய மண்ணில் படுமோசமான சாதனை
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டத்தின் முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டத்தின் முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார்.
இதன் மூலம், ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியின் முதல் பந்தில் டக் அவுட் ஆன முதல் இந்திய வீரர் என்ற மோசமான சாதனையை செய்து இருக்கிறார். மேலும், ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு போட்டியின் முதல் பந்தில் டக் அவுட்டான நான்காவது பேட்ஸ்மேன் என்ற மோசமான சாதனையையும் செய்து இருக்கிறார்.
1877 முதல் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த 147 ஆண்டு கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை நான்கு பேட்ஸ்மேன்கள் மட்டுமே டெஸ்ட் போட்டியின் முதல் பந்தில் அவுட் ஆகி இருக்கிறார்கள். அதில் ஒருவர் ஜெய்ஸ்வால்.
ஆஸ்திரேலிய மண்ணில் முதல் பந்தில் ஆட்டம் இழந்தவர்களில் ஆர்ச்சி மெக்லாரன் (இங்கிலாந்து) - 1894, ஸ்டான் வொர்திங்டன் (இங்கிலாந்து) - 1936, ரோரி பர்ன்ஸ் (இங்கிலாந்து) - 2021, யஷஸ்வி ஜெய்ஸ்வால் (இந்தியா) - 2024 ஆகியோர் உள்ளனர்.
அடுத்து இந்திய பேட்ஸ்மேன்களில் ஒரு டெஸ்ட் போட்டியின் முதல் பந்தில் ஆட்டம் இழந்த ஏழாவது பேட்ஸ்மேன் என்ற மோசமான சாதனையையும் ஜெய்ஸ்வால் செய்து இருக்கிறார். சுனில் கவாஸ்கர் இந்த மோசமான சாதனைப் பட்டியலில் மூன்று முறை இடம் பிடித்து இருக்கிறார்.
கடைசியாக கே எல் ராகுல் 2017 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தான் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டம் இழந்து இருந்தார். அதன் பின் ஏழு ஆண்டுகள் கழித்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்த மோசமான சாதனையை செய்து இருக்கிறார்.
டெஸ்ட் போட்டியின் முதல் பந்தில் ஆட்டம் இழந்த இந்திய பேட்ஸ்மேன்களில், சுனில் கவாஸ்கர், 1974 (எதிரணி - இங்கிலாந்து), சுதிர் நாயக், 1974 (எதிரணி - இங்கிலாந்து), சுனில் கவாஸ்கர், 1983 (எதிரணி - வெஸ்ட் இண்டீஸ்), சுனில் கவாஸ்கர், 1987 (எதிரணி - பாகிஸ்தான்), டபுள்யூ. வி. ராமன், 1990 (எதிரணி - நியூசிலாந்து), ஷிவ் சுந்தர் தாஸ், 2002 (எதிரணி - வெஸ்ட் இண்டீஸ்), வாசிம் ஜாஃபர், 2007 (எதிரணி - வங்கதேசம்), கே எல் ராகுல், 2017 (எதிரணி - இலங்கை), யஷஸ்வி ஜெய்ஸ்வால், 2024 (எதிரணி - ஆஸ்திரேலியா) ஆகியோர் உள்ளனர்.