ரிஷப் பண்ட் சாதனையை தகர்த்த பாகிஸ்தான் வீரர்.. தோல்விக்கு மத்தியில் மாபெரும் சாதனை!

இந்த இரண்டு விக்கெட் கீப்பர்களும் அதிக ரன்கள் குவித்த போதும் அவர்கள் விளையாடிய அணிகள் வெற்றி பெறவில்லை.

ரிஷப் பண்ட் சாதனையை தகர்த்த பாகிஸ்தான் வீரர்.. தோல்விக்கு மத்தியில் மாபெரும் சாதனை!

வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிக்கு இடையிலானமுதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்தது. எனினும்,  விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் பல்வேறு சாதனைகளை தகர்த்து உள்ளார்.

முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழக்காமல் 171 ரன்கள் எடுத்த முகமது ரிஸ்வான், இரண்டாவது இன்னிங்ஸில் 51 ரன்கள் எடுத்தார்.

அதன்படி, இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து மொத்தம் 222 ரன்கள் எடுத்ததன் ஊடாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் ஒரே போட்டியில் அதிக ரன்கள் சேர்த்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையை முகமது ரிஸ்வான் தனதாக்கினார்.

2023ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட்  எடுத்த 203 ரன்களே ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி ஒன்றில் சேர்த்த அதிக பட்ச ரன்களாக காணப்பட்டது.

எனினும், இந்த இரண்டு விக்கெட் கீப்பர்களும் அதிக ரன்கள் குவித்த போதும் அவர்கள் விளையாடிய அணிகள் வெற்றி பெறவில்லை.

இதை தவிர உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி ஒன்றின் ஒரே இன்னிங்ஸில் அதிக ரன் சேர்த்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற சாதனையையும் முகமது ரிஸ்வான் செய்து இருக்கிறார். 

முன்னதாக இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் 152 ரன்கள் எடுத்த நிலையில், தற்போது முதல் இன்னிங்ஸில் 171 ரன்கள் சேர்த்ததன் மூலம் அந்த சாதனையை முகமது ரிஸ்வான் முறியடித்து இருக்கிறார்.

பாகிஸ்தான் அணி செய்த படுமோசமான சாதனை... கிரிக்கெட் சரித்திரத்தில் இப்படி நடந்ததே இல்லை!

அத்துடன், பாகிஸ்தான் அணிக்காக ஒரே டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் சேர்த்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற சாதனையையும் அவர் செய்து உள்ளார்.

1980 இல் பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தஸ்லீம் ஆரிஃப் 210 ரன்கள் எடுத்த நிலையில்,  தற்போது 222 ரன்கள் குவித்து அந்த சாதனையை ரிஸ்வான் முறியடித்து இருக்கிறார்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp