பிசிசிஐயை மறைமுகமாக தாக்கிய முகமது ஷமி.. டி20யில் இடம் இல்லை.. அடுத்த திட்டம் என்ன?

டி20 கிரிக்கெட் பொறுத்த வரை தான் பரிசீலினையில் இருக்கிறானா இல்லையா என்பது குறித்து தெளிவாக தன்னிடம் யாரும் சொல்வதில்லை என்று கூறியுள்ளார்.

பிசிசிஐயை மறைமுகமாக தாக்கிய முகமது ஷமி.. டி20யில் இடம் இல்லை.. அடுத்த திட்டம் என்ன?

இந்தியாவில் நடந்து முடிந்த உலகக்கோப்பை போட்டியில் அதிகம் விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்த வேகப்பந்துவீச்சாளர் முகமது சமியை பாராட்டி அர்ஜுனா விருது வழங்கப்பட்டது. 

முகமது சமி தற்போது காயத்திலிருந்து மீண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதனால் முகமது சமி டி20 உலககோப்பை தொடரில் விளையாடுவாரா  என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளிக்கையில் பிசிசிஐயை மறைமுகமாக விமர்சித்தார் முகமது சமி. டி20 கிரிக்கெட் பொறுத்த வரை தான் பரிசீலினையில் இருக்கிறானா இல்லையா என்பது குறித்து தெளிவாக தன்னிடம் யாரும் சொல்வதில்லை என்று கூறியுள்ளார்.

தன்னைப் பொறுத்தவரை தான் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட ஆர்வமாக உள்ளதுடன், இதற்காக ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட முயற்சி செய்வதாகவும், இந்திய அணி நிர்வாகம் விளையாட கூறினால் நிச்சயம் அந்த விளையாடுவேன் என்று முகமது சமி தெரிவித்து உள்ளார்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்திய டி20 அணியில், சிராஜ் மற்றும் பும்ரா போன்ற வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டிருக்கிறது. 

கடந்த டி20 உலக கோப்பையில் முகமது சமிஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இதுவரை 23 போட்டிகளில் 24 விக்கெட்டுகளை முகமது சமி வீழ்த்தி இருக்கிறார். 

2023 ஐபிஎல் தொடரில் முகமது சமி 28 விக்கெட்களை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp