பும்ராவை வெளியேற்ற தீர்மானம்.. ரோஹித் என்ன சொன்னார் தெரியுமா?... வெளியான தகவல்!

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆரம்ப காலத்தில் ஜஸ்பரீத் பும்ரா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் சிறப்பாக செயல்படவில்லை.

பும்ராவை வெளியேற்ற தீர்மானம்.. ரோஹித் என்ன சொன்னார் தெரியுமா?... வெளியான தகவல்!

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆரம்ப காலத்தில் ஜஸ்பரீத் பும்ரா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் சிறப்பாக செயல்படவில்லை.

ஜஸ்பரீத் பும்ரா 2013ஆம் ஆண்டில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்த போதும், 2014-ல் இருந்துதான், அவருக்கு அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில், பும்ரா, முதல் மூன்று சீசன்களில் சேர்த்து, 11 விக்கெட்களை எடுத்த நிலையில், 15ஆவது சீசனின் பாதியிலேயே பும்ராவை கழற்றிவிட மும்பை நிர்வாகம் முடிவு செய்ததாக பார்த்தீவ் படேல் தெரிவித்துள்ளார்.

எனினும், பும்ராவை கழற்றிவிட மும்பை நிர்வாகம் முடிவு செய்தபோது, ரோஹித் சர்மா தான் அதனை தடுத்ததாகவும், அதன்பிறகு, 2016-ல் பும்ரா 14 போட்டிகளில் 16 விக்கெட்களை கைப்பற்றி, தவிர்க்க முடியாத வீரராக மாறிவிட்டார் என்றும்  பார்த்தீவ் கூறினார். 

ரோஹித் இல்லனா பும்ராவே கிடையாது.. என்ன நடந்துச்சு தெரியுமா? 

முதல் சீசனில் இருந்தே ஹர்திக் பாண்டியா அதிரடியாக விளையாடவில்லை. 2015-ல் 112 ரன்களையும், ஒரு விக்கெட்டையும் எடுத்திருந்த பாண்டியா, 2016-ல் 11 போட்டிகளில் வெறும் 44 ரன்களையும், 3 விக்கெட்களையும்தான் எடுத்திருந்தார்.

ஹர்திக் பாண்டியா படுமோசமாக சொதப்பியதால், இவரை வெளியேற்ற மும்பை நிர்வாகம் முடிவு செய்தபோது, ரோஹித் சர்மாதான் இதனையும் தடுத்துள்ளதுடன், ஹர்திக் சிறந்த வீரர், போகபோக அவர் பெரிய ஸ்டாராக மாறுவார் என மும்பை நிர்வாகத்திடம் கூறியதாக பார்த்தீவ் படேல் தெரிவித்தார்.

அப்படி ரோஹித் காப்பாற்றிவிட்ட நிலையில், இன்று ஹர்திக் மறைமுகமாக சில வேலைகளை செய்து, ரோஹித்தை கீழே இறக்கிவிட்டதாக பார்த்தீவ் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

இந்த நிலையில், ரோஹித் சர்மாவுக்கு முதுகு வலி பிரச்சினை இருப்பதாகவும், பும்ராவுக்கும் ஓய்வு தேவைப்படுவதால், இந்த இருவரும் ஐபிஎல் 17ஆவது சீசனின் முதல் 5 போட்டிகளில் பங்கேற்க மாட்டார்கள் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

மார்ச் 24ஆம் தேதி குஜராத் டைடன்ஸை எதிர்த்து மும்பை இந்தியன்ஸ் அணி விளையாட உள்ளது. அடுத்து, மார்ச் 27, ஏப்ரல் 1, ஏப்ரல் 7 ஆகிய தேதிகளில் சன் ரைசர்ஸ், ராஜஸ்தான், டெல்லி ஆகிய அணிகளை எதிர்த்து களமிறங்க உள்ளது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp