சூர்யகுமார் தலைமையில் களமிறங்கும் மும்பை...  அணியில் அதிரடி மாற்றம்.. காரணம் என்ன?

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 18-வது சீசன் வரும் சனிக்கிழமை தொடங்க உள்ளதுடன்,  கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் துவக்க விழாவில் ஏராளமான நட்சத்திரங்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

சூர்யகுமார் தலைமையில் களமிறங்கும் மும்பை...  அணியில் அதிரடி மாற்றம்.. காரணம் என்ன?

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை அணிக்கு எதிராக வரும் ஞாயிறு அன்று நடைபெற உள்ள போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 18-வது சீசன் வரும் சனிக்கிழமை தொடங்க உள்ளதுடன்,  கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் துவக்க விழாவில் ஏராளமான நட்சத்திரங்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணி பெங்களூருவை எதிர்கொள்கிறது. இந்த தொடரில் சென்னை அணி தனது முதல் போட்டியில் வலுவான மும்பை இந்தியன்ஸ் அணியை ஞாயிறு அன்று எதிர்கொள்கிறது. 

இந்த நிலையில், சென்னை அணிக்கு எதிரான முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட ஹர்திக் பாண்டியா விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி மூன்று போட்டிகளில் மெதுவாக பந்துவீசி அதிக நேரத்தை எடுத்துக் கொண்ட நிலையில், ஹர்திக் பாண்டியாவிற்கு நடப்பு சீசனில் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. 

அதன் அடிப்படையில் அவர் சென்னை அணிக்கு எதிரான முதல் போட்டியில் பங்கேற்க மாட்டார் என்ற நிலையில்,  இந்திய டி20 அணியின் கேப்டனாக இருக்கும் சூர்யகுமார் யாதவ், மும்பை இந்தியன்ஸ் அணியை வழிநடத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் பேசிய ஹர்திக் பாண்டியா, தமது அணியில் பும்ரா, ரோஹித் சர்மா, சூர்யா குமார் யாதவ் என மூன்று கேப்டன்கள் உள்ளதால், தனக்கு உதவி தேவைப்பட்டால் அவர்கள் எப்போதும் ஆலோசனை வழங்குவார்கள் என்று கூறினார்.