நாணய சுழற்சியிலும் ஏமாற்றியதா மும்பை அணி? நாணயத்தை திருப்பிய ஸ்ரீநாத்?
ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் 197 ரன்கள் என்ற இலக்கை, மும்பை அணி 15.3 ஓவர்களிலேயே சேஸிங் செய்து மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது.
ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் 197 ரன்கள் என்ற இலக்கை, மும்பை அணி 15.3 ஓவர்களிலேயே சேஸிங் செய்து மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது.
இந்த போட்டியில் ஆர்சிபி அணியின் பவுலிங் மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டதுடன், மும்பை அணியின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்தாலும், நடுவர்கள் நிதின் மேனன், வினீத் குல்கர்னி மற்றும் விரேந்தர் சர்மா ஆகியோரின் முடிவுகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
ஆர்சிபி அணியின் ரஜத் பட்டிதர் அடித்த பவுண்டரியை தடுக்க முயன்ற ஆகாஷ் மத்வால் சில தவறுகளை செய்ததுடன், அவரின் உடல் பவுண்டரி எல்லை தொட்டிருந்த போது, பந்தும் தொடை பகுதியில் ஒட்டியிருந்தது. ஆனாலும் பவுண்டரி அளிக்கப்படவில்லை.
கடைசி ஓவரில் ஆகாஷ் மத்வால் வீசிய பந்து நோ-பால் என்று தெரிந்த போதும், 3வது நடுவர் நோ-பால் இல்லை என்று அறிவித்தார். இது நடுவர்கள் மீதான நம்பிக்கையையே சந்தேகம் கொள்ள செய்துள்ளது.
இந்த நிலையில் ஆர்சிபி - மும்பை அணிகளுக்கு இடையிலான நாணய சுழற்சியிலும் நடுவர்களின் செயல்பாடுகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நாணய சுழற்சிக்கு பயன்படுத்தப்பட்ட நாணயத்தை ஆட்ட நடுவரான ஜவஹல் ஸ்ரீநாத் எடுத்த போது, தலைகீழாக மாற்றியதாக ஆர்சிபி ரசிகர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
அத்துடன், இதுதொடர்பாக சில வீடியோக்களும் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வருகிற போதும், அந்த வீடியோவில் ஜவஹல் ஸ்ரீநாத் நாணயத்தை எடுத்து திருப்பியது முழுமையாக தெரியவில்லை.
ஆனால் கையில் எடுத்தபடி நாணயத்தை பார்க்காமல் கையை தலைகீழாக மாற்றி நாணயத்தை ஸ்ரீநாத் பார்ப்பது உறுதியாகியுள்ளதால் ஆர்சிபி அணியை நாணய சுழற்சியிலேயே ஏமாற்றி மும்பை அணிக்கு சாதகமாக நடுவர்கள் செயல்பட்டதாக ரசிகர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.