மும்பையுடன் அனல் பறக்கவுள்ள போட்டி... சிஎஸ்கே பிளேயிங் வெலனில் இரண்டு அதிரடி மாற்றங்கள்?

ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே - மும்பை அணிகளுக்கு இடையிலான எதிர்பார்ப்புமிக்க ஆட்டம் வான்கடே மைதானத்தில் நாளை நடக்கவுள்ளது. 

மும்பையுடன் அனல் பறக்கவுள்ள போட்டி... சிஎஸ்கே பிளேயிங் வெலனில் இரண்டு அதிரடி மாற்றங்கள்?

ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே - மும்பை அணிகளுக்கு இடையிலான எதிர்பார்ப்புமிக்க ஆட்டம் வான்கடே மைதானத்தில் நாளை நடக்கவுள்ளது. 

இரு அணிகளும் தலா 5 கோப்பைகளை வெற்றிக்கொண்டுள்ள நிலையில், மும்பை அணி 6ஆவது கோப்பையை வெல்ல பல்வேறு மாற்றங்களுடன் தயாராகி உள்ளது.

மும்பை அணி 3 தோல்விகளுடன் இந்த சீசனை தொடங்கினாலும், அடுத்தடுத்து 2 போட்டிகளை வென்றுள்ளதுடன், சிஎஸ்கே அணி வெளி மைதானங்களில் விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது.

சிஎஸ்கே அணியை பொறுத்தவரை தீபக் சஹர் மற்றும் பதிரானா ஆகியோர் காயத்தில் உள்ளாதால், சிஎஸ்கே அணியின் பவுலிங் பலவீனமடைந்துள்ளது. 

இருந்தாலும், சிஎஸ்கே அணிக்கு போதுமான ஓய்வு கிடைத்துள்ளதால், இருவருமே காயத்தில் இருந்து குணமடைந்துவிட்டதாக தெரிவிக்கப்படுவதால், சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவனில் மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சிறு வயது முதலே மும்பை வான்கடே மைதானத்தில் விளையாடிய ரஹானே, ஷர்துல் தாக்கூர், சிவம் துபே, துஷார் தேஷ்பாண்டே மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகிய வீரர்கள் இருப்பதால், சிஎஸ்கே அணி நிச்சயம் சவாலாக இருக்கும்.

இதேவேளை, வான்கடே மைதானத்தில் அதிரடி ஹிட்டர்கள் அவசியம் என்பதால் சிவம் துபேவுடன் இளம் வீரர் சமீர் ரிஸ்வி களமிறங்க வாய்ப்பு காணப்படுகின்றது.

ருதுராஜ் கெய்க்வாட், ரச்சின், ரஹானே, சிவம் துபே, மிட்சல், சமீர் ரிஸ்வி, ஜடேஜா, தோனி, தீபக் சஹர், துஷார் தேஷ்பாண்டே, பதிரானா, முஸ்தாஃபிசுர் ரஹ்மான் ஆகியோர் நாளைய போட்டியில் களமிறங்க வாய்ப்புகள் அதிகம்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp