பூமிக்கு அருகில் இன்று வரும் விண்கல்..? நாசா விஞ்ஞானிகள் கொடுத்த எச்சரிக்கை

சூரியனை சுற்றி வரும் விண்கல் ஒன்று இன்று பூமி மீது மோதலாம் என நாசா விஞ்ஞானிகள் அதிர்ச்சியளித்துள்ளார்கள்.

பூமியின் மீது மோத வரும் விண்கல்

பூமியின் மீது மோத வரும் விண்கல்

பெரிய விண்கற்கள் உடைந்து சிதறும் போதோ அல்லது கோள்கள் உருவாகும் போதோ மிச்சமிருக்கும் பொருட்கள் விண்கல்லாக உருவாகிறது என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். 

ஒரு விண்கல் என்பது ஒரு சிறிய கிரகம்

ஒரு விண்கல் என்பது ஒரு சிறிய கிரகம்

தன்னை தானே சுற்றிக்கொள்ளாத, வெவ்வேறு பாதைகளில் சூரியனை சுற்றி பயணிக்கும் தன்மை கொண்டவையாக விண்கல் இருக்கின்றன.

அதிசய நிகழ்வுகள்

அதிசய நிகழ்வுகள்

இந்த விண்கல் கிரகங்கள் மீது அவ்வப்போது விழுகிறது. பெரும் மர்மத்தைக் கொண்டுள்ள நமது வான்வெளியில் பல அதிசய நிகழ்வுகள் நடந்துகொண்டே இருக்கின்றன. 

கிரகங்கள் மீது விழும் விண்கற்கள்

கிரகங்கள் மீது விழும் விண்கற்கள்

அப்படி கிரகங்கள் மீது விழும் விண்கற்கள், கிரகங்களின் ஈர்ப்புவிசையால் எரிந்துகொண்டே விழுகிறது. அப்போது அது எரிகல்லாக மாறி அந்த கிரகத்தில் பெரும் சேதத்தையும் ஏற்படுத்துகிறது. இந்த எரிகல் சிறியது முதல் பெரியது வரை அனைத்து அளவிலும் இருக்கிறது.

ஸ்பேஸ் ராக் 99942 Apophis

ஸ்பேஸ் ராக் 99942 Apophis

தற்போது பூமிக்கு அப்படி ஒரு பிரச்சனைதான் உருவாகியுள்ளது. 'ஸ்பேஸ் ராக் 99942 Apophis' என்ற விண்கல் ஒன்று பூமிக்கு அருகில் இன்று வருவதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

100 அணுகுண்டுகள்

100 அணுகுண்டுகள்

இந்த விண்கல் 450*170 மீட்டர் அளவு கொண்டதாகவும், இது பூமி மீது விழுந்தால் சுமார் 100 அணுகுண்டுகள் பூமியில் வெடித்த சேதத்தை ஏற்படுத்தும் என கூறப்பட்டுள்ளது.