எந்த ஒரு திட்டமும் இல்லை.. இந்திய அணியின் படுதோல்விக்கான காரணம் என்ன?

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 

எந்த ஒரு திட்டமும் இல்லை.. இந்திய அணியின் படுதோல்விக்கான காரணம் என்ன?

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 

இந்த நிலையில் இந்திய அணி அடைந்த படுதோல்விக்கான காரணங்கள் என்ன என்று பார்க்கலாம்.

டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி வீரர்கள் ஒரு வாரத்திற்கு முன்பு தென்னாப்பிரிக்காவுக்கு வந்து நான்கு நாள் பயிற்சி போட்டியில் தங்களுக்குள்ளே இரண்டு அணிகளாக பிரித்து விளையாடினார்கள்.

இதற்கு பதிலாக இந்திய அணி தென்னாபிரிக்காவில் உள்ளூர் அணியுடன் ஒரு போட்டியில் பங்கேற்று விளையாடி இருந்தால் ஓரளவுக்கு அவர்களுடைய வேகப்பந்து வீச்சு எப்படி இருக்கும். ஆடுகளம் எவ்வாறு செயல்பட்டு இருக்கும் என்று தெரியும். 

2010 ஆம் ஆண்டு இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது அப்போதைய பயிற்சியாளராக இருந்த கேரி கிறிஸ்டன் இரண்டு மூன்று வாரத்திற்கு முன்பே இந்திய அணி வீரர்களை தென்னாப்பிரிக்காவுக்கு அழைத்துச் சென்றார்.

அப்போது அவர் அளித்த பேட்டியில் “தென்னாப்பிரிக்க மண்ணில் நீங்கள் சாதிக்க வேண்டும் என்றால் குறைந்தது ஆயிரம் பந்துகளை பயிற்சியில் நீங்கள் எதிர்கொண்டு இருக்க வேண்டும்” என்று கூறினார். 

இந்திய அணி 20 நாட்களுக்கு முன்பே தென்னாப்பிரிக்காவுக்கு சென்று அங்குள்ள அணிகளுக்கு எதிராக இரண்டு பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்று இருக்க வேண்டும். ஆனால், இது நடக்கவில்லை.

அனுபவம் குன்றிய வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டாதால்தான் தோல்வி. கில், ஜெய்ஸ்வால் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் டி20 ஒருநாள் என தொடர்ந்து விளையாடுகிறார்கள்.

இவர்களை டெஸ்ட் போட்டியில் சேர்ப்பதற்கு பதிலாக ரஞ்சி கிரிக்கெட்டிலே நன்றாக விளையாடிய அபிமன்யு ஈஸ்வரன், சப்ராஸ்கான் போன்ற வீரர்களுக்காவது வாய்ப்பு கொடுத்து இருக்கலாம்.

இப்படி மூன்று பிரிவுகளிலும் ஒரே வீரர்களை வைத்து விளையாடுவதால் என்னதான் பலன் என்று தெரியவில்லை. பந்துவீச்சாளர்கள் சரியான லென்த் மற்றும் லைனில் வீசவே இல்லை. இதனைப் பயன்படுத்தி தென்னாப்பிரிக்க வீரர்கள் அதிரடியாக விளையாடி இந்திய வீரர்களை நிலை குலைய வைத்து விட்டார்கள். 

போதிய அனுபவம் இல்லாத வீரர்களை ஒரு வாரத்திற்கு முன்பு அழைத்துக்கொண்டு சாதித்து விடலாம் என்று நினைத்தால் இப்படித்தான் நடக்கும் என பலரும் இந்திய அணியை விமர்சித்து வருகின்றனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...