டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுளை எடுத்து ஆஸ்திரேலிய வீரர் சாதனை!
12 ஆண்டுகளில் 31,608 பந்துகளை வீசியுள்ள லயன், இதுவரை ஒரு முறை கூட நோ-பால் வீசியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் பெர்த் மைதானத்தில் நடைபெற்ற முதல்போட்டியில் ஆஸ்திரேலியா அணி 360 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதன் மூலம் பாகிஸ்தான் அணி தொடர்ந்து 15வது முறையாக ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியடைந்துள்ளது.
இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸின் போது ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் நாதன் லயன் பாகிஸ்தான் அணியின் ஃபஹீம் அஷ்ரப்பை வீழ்த்தி அசத்தினார்.
அறிமுகத்திலேயே அசத்திய தமிழக வீரர்... முதல் போட்டியிலேயே சாய் சுதர்சன் சாதனை!
இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனை படைத்துள்ளார் லயன். டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய 8வது வீரர் என்ற சாதனையை லயன் படைத்துள்ளார்.
அதேபோல் ஆஸ்திரேலியா கிரிக்கெட்டில் ஷேன் வார்னே, மெக்ராத் ஆகியோருக்கு பின் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய 3வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதுவரை 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள நாதன் லயன், 501 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
ஷேன் வார்னேவின் ஓய்வுக்கு பின் தரமான சுழற்பந்துவீச்சாளர் இல்லாமல் திண்டாடி கொண்டிருந்த ஆஸ்திரேலியா அணிக்கு, வரமாக வந்தவர் என்றே சொல்ல முடியும்.
சாதாரண மைதான ஊழியராக இருந்த நாதன் லயன், திடீரென ஆஸ்திரேலியா அணியில் இடம்பிடித்து கற்பனை செய்ய முடியாத சாதனைகளை செய்து கொண்டிருக்கிறார்.
12 ஆண்டுகளில் 31,608 பந்துகளை வீசியுள்ள லயன், இதுவரை ஒரு முறை கூட நோ-பால் வீசியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.