13 வருட சாதனையை உடைத்தெறிந்த ரோஹித் சர்மா அணி! சோகத்தில் ரசிகர்கள்!

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்த  இந்திய அணி,  தொடரை இழந்து உள்ளது. 

13 வருட சாதனையை உடைத்தெறிந்த ரோஹித் சர்மா அணி! சோகத்தில் ரசிகர்கள்!

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்த  இந்திய அணி,  தொடரை இழந்து உள்ளது. 

முதல் டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்திலும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி தோல்வியை தழுவி உள்ளது.

இதனையடுத்து,  4331 நாட்களுக்குப் பின் சொந்த மண்ணில் இந்திய அணியானது முதன்முறையாக ஒரு டெஸ்ட் தொடரை இழந்து உள்ளது.

அத்துடன், ஒரே ஆண்டில் மூன்று டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்து 41 ஆண்டுகளுக்கு பின் மோசமான சாதனையை படைத்து உள்ளது.

இந்திய அணியானது இந்திய மண்ணில்  ஒரே வருடத்தில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகளில் தோல்வி அடைந்த சம்பவம் இதுவரை இரண்டு முறை நடந்து உள்ளது.

1969 ஆம் ஆண்டு இந்திய அணி இந்திய மண்ணில் நான்கு டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்ததுடன், 1983 ஆம் ஆண்டு மூன்று டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்தது.

2024 ஆம் ஆண்டு இதுவரை இந்திய அணி மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்து  உள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தாலும்,  அடுத்த நான்கு போட்டிகளையும் வென்று 4 - 1 என்று தொடரை கைப்பற்றியது.

இதனையடுத்து, நியூசிலாந்து அணிக்கு எதிராக முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்து உள்ளது இந்திய அணி.

கடைசியாக 2012 ஆம் ஆண்டு இந்திய அணி இந்திய மண்ணில் இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரை இழந்து இருந்ததுடன்,  அப்போது 2 - 1 என டெஸ்ட் தொடரை இழந்து இருந்தது. 

அதன் பின் 4331 நாட்கள் இந்திய மண்ணில் நடந்த டெஸ்ட் தொடர்களில் எல்லாம் இந்திய அணி தோல்வியே சந்திக்கவில்லை.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp