இந்திய டெஸ்ட் தொடருக்கு முன்னர் நியூசிலாந்து கேப்டன் ராஜினாமா.. இலங்கையுடனான தோல்விதான் காரணமா? 

இந்தியாவுடனான டெஸ்ட் தொடர் இன்னும் 2 வாரங்களில் ஆரம்பிக்கவுள்ளநிலையில், நியூசிலாந்து அணியின் கேப்டன் டிம் சவுதி ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். 

இந்திய டெஸ்ட் தொடருக்கு முன்னர் நியூசிலாந்து கேப்டன் ராஜினாமா.. இலங்கையுடனான தோல்விதான் காரணமா? 

இந்தியாவுடனான டெஸ்ட் தொடர் இன்னும் 2 வாரங்களில் ஆரம்பிக்கவுள்ளநிலையில், நியூசிலாந்து அணியின் கேப்டன் டிம் சவுதி ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். 

வங்கதேசம் அணிக்கு எதிரான  டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியதுடன், சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 18ஆவது முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் பயணத்தில் இந்திய அணி அடுத்த கட்டத்திற்கு  சென்றுள்ளதுடன், வரும் 16ஆம் தேதி நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.

முதல் டெஸ்ட் போட்டி 16ஆம் தேதி பெங்களூர் சின்னச்சாமி மைதானத்திலும், 2வது டெஸ்ட் போட்டி 24ஆம் தேதி புனே மைதானத்திலும், கடைசி டெஸ்ட் போட்டி நவம்பர் 1ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்திலும் நடக்கவுள்ளது. 

இதனால் இந்திய டெஸ்ட் அணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதுடன், வங்கதேச டி20 தொடரில் சூர்யகுமார் தலைமையில் புதிய வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நியூசிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் டிம் சவுதி பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இதுவரை நியூசிலாந்து அணிக்காக 102 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 382 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கின்றார்.

2022ஆம் ஆண்டு கேப்டன் பதவியில் இருந்து கேன் வில்லியம்சன் விலகிய பின், அந்த பொறுப்புக்கு டிம் சவுதி வந்ததுடன், நியூசிலாந்து அணியை 14 போட்டிகளில் வழிநடத்தி, 6 வெற்றி, 6 தோல்வி, 2 டிராவுடன் பயணத்தை முடித்து கொண்டுள்ளார். 

இதுகுறித்து டிம் சவுதி பேசுகையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணியின் கேப்டனாக செயல்பட்டதை பெருமையாக உணர்கிறேன். இந்த முடிவும் அணியின் நலனை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டது.

தொடர்ந்து நியூசிலாந்து அணியின் பவுலராக செயல்பட்டு பங்களிப்பேன் எனக்கு பின் கேப்டனாக பொறுப்பேற்க உள்ள டாம் லேதமுக்கு வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு டாம் லேதம் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். தற்போது 3 வடிவங்களிலும் நியூசிலாந்து அணியை வழிநடத்தவுள்ளார்.

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி அடைந்த தோல்வியே  டிம் சவுதியின் முடிவுக்கு காரணமாக கூறப்படுகின்றது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp