எந்த வீரரும் நினைத்துப் பார்க்க முடியாத சாதனை... ஆஸ்திரேலிய டெஸ்டில் இந்திய வீரர் சாதனை!

உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் கூட அதிக அளவில் ஆடாத நிதிஷ்குமார் ரெட்டி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமானார்.

எந்த வீரரும் நினைத்துப் பார்க்க முடியாத சாதனை... ஆஸ்திரேலிய டெஸ்டில் இந்திய வீரர் சாதனை!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இரண்டாவது போட்டியில் ஒரே ஒரு வீரராக நிதிஷ் குமார் ரெட்டி மட்டுமே நம்பிக்கை அளிக்கும் வகையில் செயல்பட்டு இருக்கிறார். இரண்டு போட்டிகளில், நான்கு இன்னிங்ஸ்களிலும் சராசரியாக 40 ரன்கள் எடுத்து இருந்தார்.

இந்த நிலையில், அவர் ஆஸ்திரேலிய மண்ணில் எந்த இந்திய வீரரும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத சிக்ஸர் சாதனையை படைத்து இருக்கிறார். இதற்கு முன் உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் கூட அதிக அளவில் ஆடாத நிதிஷ்குமார் ரெட்டி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமானார்.

இந்த தொடரில் இரண்டு போட்டிகளில் மட்டுமே ஆடி இருக்கும் அவர் இதுவரை 7 சிக்ஸ் அடித்து இருக்கிறார். அதில் 6 சிக்ஸர்களை ஆஸ்திரேலியாவின் வேகப் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அடித்து இருக்கிறார். இது மிகப்பெரிய சாதனை ஆகும். 
ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அங்குள்ள பெரிய மைதானங்களில் சிக்ஸ் அடிப்பது என்பது மிகப்பெரிய சாதனை. நிதிஷ் குமார் ரெட்டி வெறும் இரண்டு போட்டிகளில் மட்டுமே ஆடி அந்த சாதனையை செய்து இருக்கிறார். 

ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அதிக சிக்ஸ் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் அவர் முதல் இடத்தை பிடித்து இருக்கிறார். இதற்கு முன் ரோஹித் சர்மா, அஜிங்கியா ரஹானே, ரிஷப் பண்ட் மற்றும் ஜாகிர் கான் ஆகியோர் ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக தலா மூன்று சிக்ஸர்களை அடித்துள்ளனர். 

ஆனால், நிதிஷ்குமார் ரெட்டி இரண்டு போட்டிகளிலேயே 6 சிக்ஸர்களை அடித்து விட்டார். இந்த 6 சிக்ஸ் மட்டும் இல்லாமல் பகுதி நேர சுழற் பந்துவீச்சாளர் மார்னஸ் லாபுஷேனுக்கு எதிராக ஒரு சிக்ஸ் அடித்து இருந்தார். 

மொத்தம் 7 சிக்ஸ் அடித்து இருக்கும் நிதிஷ் குமார், இந்த தொடரில் மீதமுள்ள மூன்று போட்டிகளில் மேலும் 6 சிக்ஸர்கள் அடித்தால் ஆஸ்திரேலிய மண்ணில் எந்த கிரிக்கெட் வீரரும் செய்யாத மாபெரும் சாதனையை செய்வார்.

கிறிஸ் கெயில் மற்றும் விவியன் ரிச்சர்ட்ஸ் மட்டுமே ஆஸ்திரேலிய மண்ணில் அதிக சிக்ஸர்களை அடித்த வெளிநாட்டு பேட்ஸ்மேன்கள் ஆவர். அவர்கள் இருவரும் 12 சிக்ஸர்களை அடித்துள்ளனர். 

இந்திய அளவில் ஆஸ்திரேலிய மண்ணில் அதிக சிக்ஸ் அடித்த வீரர்கள் பட்டியலில் ரிஷப் பண்ட் (10 சிக்ஸ்), ரோஹித் சர்மா (10 சிக்ஸ்), மற்றும் வீரேந்தர் சேவாக் (8 சிக்ஸ்) உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் சுழற் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சிலேயே அதிக சிக்ஸ் அடித்து உள்ள நிலையில், இவர்களது சாதனையையும் நிதிஷ்குமார் ரெட்டி விரைவில் முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அவர் இந்த தொடரில் இதுவரை நான்கு இன்னிங்ஸ்களில் 41, 38, 42 மற்றும் 42 ஆகிய ஸ்கோர்களை எடுத்துள்ளார். இதில் மூன்று இன்னிங்ஸ்களில் இந்திய அணி 200 ரன்களை கூட தாண்டாத நிலையில், நிதிஷ் குமார் சராசரியாக 40 ரன்களை எடுத்ததுடன், மூன்று இன்னிங்ஸ்களிலும் இந்திய அணியிலேயே அதிக ரன் குவித்த வீரராகவும் நிதிஷ்குமார் ரெட்டி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp