இந்திய ஒருநாள் அணியின் புதிய கேப்டன் யார்? ரோகித் இல்லை.. இரண்டு வீரர்கள் போட்டி!

மூத்த வீரர்களுக்கு ஓய்வு வேண்டும் என்பதற்காக இலங்கை தொடரில் அவர்கள் தேர்வு செய்யப்பட மாட்டார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

இந்திய ஒருநாள் அணியின் புதிய கேப்டன் யார்? ரோகித் இல்லை.. இரண்டு வீரர்கள் போட்டி!

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் போட்டியில் முதலில் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற வீரர்கள் பங்கு பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், மூத்த வீரர்களுக்கு ஓய்வு வேண்டும் என்பதற்காக இலங்கை தொடரில் அவர்கள் தேர்வு செய்யப்பட மாட்டார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

இதனால், ரோகித் சர்மா இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் பங்கேற்காத நிலையில்,  புதிய கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. 

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் ரோஹித் சர்மா தான் கேப்டன் என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அறிவித்துள்ள நிலையில், இலங்கை எதிரான தொடரில் ரோகித் பங்கேற்க மாட்டேன் என கூறியிருக்கிறார். 

இதனால் அவருக்கு பதில் ஹர்திக் பாண்டியா அல்லது கே.எல். ராகுல் என இரண்டு பேரில் கேப்டன் பதவிக்கு போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹர்திக் பாண்டியா இந்திய டி20 அணியின் கேப்டனாக ஏற்கெனவே இருந்த நிலையில் அவருடைய கேப்டன்ஷி திறன் ஐபிஎல் தொடரில் கேள்விக்குறியானது. 

மும்பை அணியின் கேப்டனாக அவர் படுமோசமாக செயல்பட்டதால், அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

இதேபோன்று  உலகக் கோப்பை தொடருக்கு முன்பு நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் கேஎல் ராகுல் தலைமையிலான இந்திய அணி அபாரமாக செயல்பட்டது. 

அது மட்டுமில்லாமல் இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக கம்பீர் வரப் போகிறார் என கருதப்படுகிறது. கௌதம் கம்பீர், கே எல் ராகுலின் உற்ற நண்பராக இருக்கிறார். இருவரும் லக்னோ அணிக்காக இணைந்து பணியாற்றி இருக்கிறார்கள். 

இதனால் ரோகித் சர்மா இல்லாத பட்சத்தில் கௌதம் கம்பீர் கே எல் ராகுலையே கேப்டனாக செயல்பட வாய்ப்பு கொடுப்பார் என தெரிகிறது. 

இதனால் இலங்கைத் தொடரில் ராகுல் தான் கேப்டனாக இருக்க போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...