கடைசி நேரத்தில் இந்திய அணியில் ஏற்பட்ட மிகப் பெரிய ட்விஸ்ட்.. இளம் வீரருக்கு அதிஷ்டம்
சுப்மன் கில்லும் காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கே எல் ராகுல் தான் தொடக்க வீரராக களமிறங்கப் போகிறார் என்று தகவல் வெளியானது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வெள்ளிக்கிழமை இந்திய நேரப்படி காலை 7:50 மணிக்கு பெர்த் நகரில் நடக்கவுள்ளதுடன், ரோகித் சர்மா இந்த ஆட்டத்தில் பங்கேற்காத நிலையில் பும்ரா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், இந்திய அணியின் நட்சத்திர வீரர் சுப்மன் கில்லும் காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கே எல் ராகுல் தான் தொடக்க வீரராக களமிறங்கப் போகிறார் என்று தகவல் வெளியானது.
ஆனால் கடைசி நேரத்தில் இந்திய அணி நிர்வாகம் ஒரு மாற்றத்தை செய்திருப்பதாக தெரிவிக்கப்படுவதுடன், கில்லுக்கு பதில் படிக்கல் சேர்க்கப்படுவார் என்று கூறப்பட்ட நிலையில், படிக்கல்லை விட கேஎல் ராகுல் நம்பர் மூன்றாவது வீரராக நன்றாக செயல்படுவார் என ராகுலை மூன்றாவது வீரராக இந்திய அணி களம் இறக்க உள்ளது.
இதனையடுத்து, தொடக்க வீரராக அபிமன்யு ஈஸ்வரன் விளையாடலாம். இந்திய ஏ அணியில் விளையாடிய அபிமனியூ ஈஸ்வரன் நான்கு இன்னிங்ஸ்களில் 36 ரன்கள் தான் அடித்து இருந்தார். ஆனால் அபிமன்யூ ஈஸ்வரன் ஒரு நல்ல டெஸ்ட் வீரராக தன்னுடைய திறமையை நிரூபித்து இருக்கிறார்.
இதனால் அபிமன்யு ஈஸ்வரனுக்கு தொடக்க வீரர் வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது. இதேபோன்று சர்பராஸ் கானுக்கு பதிலாக துருவ் ஜூரலுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என பார்க்கப்படுகின்றது.
இந்திய அணியின் கேப்டன்சி குறித்து பேட் கம்மின்ஸ் என்ன சொன்னார் தெரியுமா?
அத்துடன், வேகப்பந்துவீச்சை பொறுத்தவரை பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட பிரசித் கிருஷ்ணாவுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு பதில் ஆகாஷ் தீப் தான் விளையாடப் போகிறார் என்றும் தெரிகிறது.
இதேவேளை, நிதிஷ் குமாருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் சேர்க்க வேண்டும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கூறி வரும் நிலையில், வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு கிடைக்காது என்று கூறப்படுகிறது.
எனினும், வாய்ப்புக்காக பல ஆண்டுகளாக காத்திருந்த அபிமன்யூ ஈஸ்வரன் நாளைய போட்டிய்ல அறிமுகமாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.