இந்தியா - இலங்கை தொடரில் 3 நட்சத்திர வீரர்களுக்கு ஓய்வு... பிசிசிஐ வைத்துள்ள ட்விஸ்ட் 

இந்திய அணியானது அடுத்து, இலங்கை, வங்கதேசம், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவுள்ளது.

இந்தியா - இலங்கை தொடரில் 3 நட்சத்திர வீரர்களுக்கு ஓய்வு... பிசிசிஐ வைத்துள்ள ட்விஸ்ட் 

இந்திய அணியானது அடுத்து, இலங்கை, வங்கதேசம், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவுள்ளது.

இதானால், இந்த மாத இறுதியில் இடம்பெறவுள்ள இலங்கை சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

வங்கதேசம், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர் இருப்பதால் ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | இந்திய ஒருநாள் அணியின் புதிய கேப்டன் யார்? ரோகித் இல்லை.. இரண்டு வீரர்கள் போட்டி!

தற்போத,  ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி பங்கேற்றுள்ளதுடன்,  இதனையடுத்து, இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. 

ஆசியக் கோப்பை தொடருக்கு பின் மீண்டும் இந்திய அணி, இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதுடன், அங்கு 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

மேலும், இலங்கை சுற்றுப்பயணத்தின் போது, இந்திய அணியின புதிய பயிற்சியாளர் இணைவார் என்றும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். 

இதேவேளை, ஜிம்பாப்வே டி20 தொடரில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்ட நிலையில், இலங்கை தொடரில் அவர்கள் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அத்துடன், டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்பார்கள் என்று கூறப்பட்டது.

இதற்கான இந்திய அணியை தேர்வு செய்ய அடுத்த வாரம் பிசிசிஐ அதிகாரிகள் கூடவுள்ள நிலையில் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க | இலங்கை அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட அதிரடி மன்னன்... ரசிகர்கள் மகிழ்ச்சி!

சீனியர்கள் இன்னும் சில நாட்கள் ஓய்வில் இருக்கலாம் என்று கருதுவதாகவும், இலங்கை சுற்றுப்பயணத்திற்கு பின் இந்திய அணி ஹோம் சீசனில் பங்கேற்கவுள்ளதால் ரோகித் சர்மா, பும்ரா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஓய்வு எடுக்கலாம் என்று கூறியுள்ளதாக பிசிசிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், செப்டம்பர் மாதம் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் நடக்கவுள்ளதுடன், அக்டோபர் - நவம்பர் மாதத்தில் நியூசிலாந்து - இந்தியா டெஸ்ட் தொடர் நடக்கவுள்ளது. 

அதன்பின் உடனடியாக தென்னாப்பிரிக்காவுக்கு சென்று டி20 தொடர் நடக்கவுள்ளதுடன், அதன்பின் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க ஆஸ்திரேலியா பயணிக்கவுள்ளது. 

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp