கோலி, ரோகித் இல்லை.. சிறந்த டெஸ்ட் அணி.. ஹர்சா போக்லே தேர்வு

2023 ஆம் ஆண்டு உலக டெஸ்ட் தொடர் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வியை தழுவியது. 

கோலி, ரோகித் இல்லை.. சிறந்த டெஸ்ட் அணி.. ஹர்சா போக்லே தேர்வு

2023 ஆம் ஆண்டு உலக டெஸ்ட் தொடர் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வியை தழுவியது. 

இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டில் சிறப்பாக விளையாடிய வீரர்களை தேர்வு செய்து இதுதான் நடப்பாண்டின் சிறந்த டெஸ்ட் அணி என்று ஹர்ஷா போக்லே அறிவித்துள்ளார். 

இதில் இந்திய வீரர்கள் விராட் கோலி,ரோகித் சர்மா இருவருக்குமே ஹர்ஷா போக்லே வாய்ப்பு வழங்கவில்லை. ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவஜா, இங்கிலாந்து வீரர் ஷாக் கிராலி ஆகியோரை தொடக்க வீரர்களாக ஹர்ஷா  தேர்வு செய்திருக்கிறார்.

நடப்பு ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆயிரம் ரன்களைக் கடந்த ஒரே வீரர் கவாஜா ஆவார். அதேபோன்று ஜாக் கிராலி எட்டு டெஸ்ட் போட்டியில் 606 ரன்கள் அடித்திருந்தார். 

அடுத்த போட்டியில் இந்த 2 மாற்றத்தை செய்தே ஆகணும்.. சுனில் கவாஸ்கர் அதிரடி

இந்த நிலையில் நம்பர் மூன்றாவது வீரராக கேன் வில்லியம்சனுக்கும் நான்காவது வீரராக ஜோ ரூட்ட்டுக்கும் ஹர்ஷா போக்லே வாய்ப்பு வழங்கி இருக்கிறார். இதேபோன்று ஐந்தாவது வீரராக இங்கிலாந்து அணியின் ஹாரி புரூக்கை ஹர்ஷா போக்லே தேர்வு செய்து இருக்கிறார். 

ஹர்ஷா போக்லே தேர்வு செய்த அணியில் இரண்டே இரண்டு இந்திய வீரர்களுக்கு தான் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அதில் அஸ்வின் மற்றும் ஜடேஜா என இரண்டு ஆல்ரவுண்டர்களை ஹர்ஷா போக்லே தேர்வு செய்திருக்கிறார். 

இதை போன்று நியூசிலாந்து வீரர் டாம் பிளான்டலை விக்கெட் கீப்பராக குறிப்பிட்டுள்ள ஹர்ஷா போக்லே மூன்று வேகப்பந்து வீச்சாளராக ஸ்டூவர்ட் பிராட் மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆஸ்திரேலிய வீரர் ஜோஸ் ஹேசல்ஸ்வுட் ஆகியோரை ஹர்சா போக்லே தேர்வு செய்திருக்கிறார். 

ஹர்ஷா போக்லே தேர்வு செய்துள்ள அணியில் முகமது சமி ,பும்ரா போன்ற எந்த வீரருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp