இந்திய அணியில் இடமில்லை.. 3ஆவது டெஸ்ட்டில் இருந்து தமிழக வீரர் நீக்கம்?
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வாஷிங்டன் சுந்தர் 11 விக்கெட்கள் வீழ்த்தி இருந்த போதும் அவருக்கு அணியில் வாய்ப்பு அளிக்கப்படாது என்ற தகவல் அதிர்சியை ஏற்படுத்தி உள்ளது.

நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு கிடைக்காது என இந்திய அணி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வாஷிங்டன் சுந்தர் 11 விக்கெட்கள் வீழ்த்தி இருந்த போதும் அவருக்கு அணியில் வாய்ப்பு அளிக்கப்படாது என்ற தகவல் அதிர்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அவர் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்களும் உள மொத்தம் 11 விக்கெட்களை வீழ்த்தினார்.
இதனையடுத்து, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வாஷிங்டன் சுந்தர் அனைவரின் பாராட்டையும் பெற்றதுடன், அவர் இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்பு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மூன்றாவது போட்டியில் வாய்ப்பு மறுக்கப்படலாம் என்று கூறப்படுகின்றது.
மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத உள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளதுடன், வேகப் பந்துவீச்சுக்கு சாதகமான சூழ்நிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எனவே, இந்திய அணி அதிகபட்சம் இரண்டு ஸ்பின்னர்களை மட்டுமே களமிறக்கும் என்பதுடன், அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜாவை அணியை விட்டு நீக்குவது சரியாக இருக்காது என்பதால் வாஷிங்டன் சுந்தர் பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது.
அத்துடன், அவருக்கு பதிலாக மூன்றாவதாக ஒரு வேகப் பந்துவீச்சாளர் அணியில் இடம் பெறக் கூடும் எனவும், பும்ரா, ஆகாஷ் தீப் மற்றும் முகமது சிராஜ் என மூன்று வேகப் பந்துவீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்கக் கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.