துலீப் கோப்பைக்கான அணியில் இளம் வீரர் புறக்கணிப்பு... பிசிசிஐ அதிரடி... நடந்தது என்ன?

இந்திய உள்நாட்டு கிரிக்கெட் தொடரான துலீப் டிராபி அடுத்த மாதம் 5ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்த நிலையில், 4 அணிகளில் விளையாடவுள்ள வீரர்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளனர். 

துலீப் கோப்பைக்கான அணியில் இளம் வீரர் புறக்கணிப்பு... பிசிசிஐ அதிரடி... நடந்தது என்ன?

இந்திய உள்நாட்டு கிரிக்கெட் தொடரான துலீப் டிராபி அடுத்த மாதம் 5ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்த நிலையில், 4 அணிகளில் விளையாடவுள்ள வீரர்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளனர். 

இந்த தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு வங்கதேச டெஸ்ட் தொடர் வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறப்படுகின்றது.

அத்துடன், இந்தத் தொடரில் ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ரா, ஹர்திக் பாண்டியா, அஸ்வின் உள்ளிட்டோருக்கு மட்டும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. 

 ரிஷப் பண்ட், சுப்மன் கில், கேஎல் ராகுல், ஜடேஜா உள்ளிட்ட அனைவரும் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் அபிமன்யூ ஈஸ்வரன் ஆகிய 4 பேரும் 4 அணிகளின் கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

திலக் வர்மா, சிவம் துபே, உள்ளிட்ட ஏராளமான வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள போதும், நட்சத்திர வீரர் ரிங்கு சிங்கிற்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. 

முன்னதாக, இந்திய அணியின் 3 வடிவங்களுக்குமான வீரராக ரிங்கு சிங் நிச்சயம் வருவார் என்று இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக செயல்பட்ட விக்ரம் ரத்தோர், நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் துலீப் டிராபி தொடரில் கூட ரிங்கு சிங்கிற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

ரிங்கு சிங்கின் பேட்டிங் சராசரி 57.57ஆக உள்ளதுடன், முதல்தர கிரிக்கெட்டில் 44 போட்டிகளில் விளையாடியுள்ள ரிங்கு சிங், 7 சதங்கள் மற்றும் 20 அரைசதங்கள் உட்பட 3,109 ரன்களை விளாசி உள்ளார்.

இந்த நிலையில், துலீப் டிராபி முதல் சுற்றுக்கான போட்டிகள் முடிவடைந்த பின் வங்கதேச டெஸ்ட் தொடர் தொடங்கவுள்ளதால், அதன்பின்னராவது மாற்று வீரர்களாக ரிங்கு சிங், சஞ்சு சாம்சன், பிரித்வி ஷா, ஜெய்தேவ் உனாத்கட், சச்சின் பேபி உள்ளிட்ட வீரர்கள் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சஞ்சு சாம்சனுக்கு போதுமான வாய்ப்பு வழங்காமல் வீணடித்தது போல் ரிங்கு சிங் வாழ்க்கையை பிசிசிஐ வீணடிக்க முயற்சிப்பதாக ரசிகர்கள் விமர்சனம் வெளியிட்டுள்ளனர்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp