ஒபாமா - மிச்செல் தம்பதி விரைவில் விவாகரத்து?
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பாரக் ஒபாமாவும் அவரது மனைவி மிச்செல் ஒபாமாவும் விவாகரத்து செய்யவுள்ளதாக தகவல் பரவி வருகிறது.
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பாரக் ஒபாமாவும் அவரது மனைவி மிச்செல் ஒபாமாவும் விவாகரத்து செய்யவுள்ளதாக தகவல் பரவி வருகிறது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்ட் டிரம்ப் வரும் 20 ஆம் தேதி அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ளார்.
இந்த விழாவில் பங்கேற்க பல்வேறு நாட்டு தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பதவியேற்பு விழாவில் பங்கேற்க உள்ளவர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
அதில் முன்னாள் அதிபர் ஒபாமாவின் பெயர் இடம்பெற்றுள்ளது. ஆனால் ஒபாமாவின் மனைவியான மிச்செல் ஒபாமாவின் பெயர் அந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை.
தொடர்ந்து இரண்டாவது முறையாக ஒபாமாவுடன் நிகழ்ச்சியில் பங்கேற்பதை மிச்செல் ஒபாமா தவிர்த்துள்ளார். ஏற்கனவே, முன்னாள் அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டரின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் ஒபாமா மட்டுமே பங்கேற்றார்.
அவரது மனைவியான மிச்செல் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. தொடர்ந்து கணவர் பாரக் ஒபாமாவுடன் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை மிச்செல் தவிர்த்து வருகிறார். இதனால் ஒபாமா - பாரக் ஒபாமா தம்பதி விவாகரத்து செய்யவுள்ளதாக தகவல் பரவி உள்ளது.
3 ஆண்டுகள் காதலித்து 1992ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்ட ஒபாமா - மிச்செல் தம்பதிக்கு மாலியா ஒபாமா மற்றும் சாஷா ஒபாமா என்னும் இரண்டு மகள்கள் உள்ளனர்.