ஜூலை முதல் டிசெம்பர் வரையான அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான அறிவிப்பு

அஸ்வெசும திட்டத்தில் மேலும் 3 இலட்சம் குடும்பங்களை இணைத்துக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஜூலை முதல் டிசெம்பர் வரையான அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான அறிவிப்பு

அஸ்வெசும திட்டத்தில் மேலும் 3 இலட்சம் குடும்பங்களை இணைத்துக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதுவரை கிடைத்துள்ள 6 இலட்சத்து 40 ஆயிரம் அஸ்வெசும மேன்முறையீடு மற்றும் ஆட்சேபனைகளை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அஸ்வெசும கொடுப்பனவை பெறும் குடும்பங்களின் எண்ணிக்கை 17 இலட்சத்தை தாண்டியுள்ளதாக பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். 

மேன்முறையீடு மற்றும் ஆட்சேபனைகள் காரணமாக இதுவரை அஸ்வெசும கொடுப்பனவை பெற்றுக்கொண்ட 5,209 குடும்பங்கள், அந்த சலுகையை இழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், புதிதாக தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு, கடந்த ஜூலை மாதம் முதல் டிசெம்பர் மாதம் வரையிலான தவணைக் கொடுப்பனவை கூடிய விரைவில் வங்கி கணக்கில் வைப்பிட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நலன்புரி நன்மைகள் சபை உறுப்பினர்களுடன் நேற்று (18) இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே பதில் நிதியமைச்சர் இந்த விடயங்களை கூறியுள்ளார். 

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp