சிஎஸ்கேவுக்கு வந்த சிக்கல்... மேட்ச் ஃபிக்சிங் நடந்ததா? வெளியான காரணங்கள்!

பஞ்சாப்  அணியுடனான போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி தோல்வியடைந்த நிலையில், ஆர்ட்ட நிர்ணயம் நடந்ததாக ரசிகர்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.

சிஎஸ்கேவுக்கு வந்த சிக்கல்... மேட்ச் ஃபிக்சிங் நடந்ததா? வெளியான காரணங்கள்!

பஞ்சாப்  அணியுடனான போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி தோல்வியடைந்த நிலையில், ஆர்ட்ட நிர்ணயம் நடந்ததாக ரசிகர்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.

ஐபிஎல் தொடரில் மேட்ச் ஃபிக்சிங் செய்யதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள 2016ஆம் ஆண்டு  2 ஆண்டுகள் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு தடை விதிக்கப்பட்டது. 

ஆனால், 2012ஆம் ஆண்டு கேகேஆர் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் சிஎஸ்கே அணியின் ஆட்டம் சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில், 2012ஆம் ஆண்டு முதலே சிஎஸ்கே அணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன.

2018ஆம் ஆண்டுக்கு பின்னர் சிஎஸ்கே அணி மீது இதுபோன்ற குற்றச்சாட்டுகள் எழாத நிலையில் சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டியில் மேட்ச் ஃபிக்சிங் செய்யப்பட்டதாக ரசிகர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

முதலில் ஆடிய சிஎஸ்கே அணியில் மொத்தமாக பேட்டிங் வரிசை மாற்றப்பட்டிருந்தது.  ரஹானே ஆட்டமிழந்த பின் டேரல் மிட்சல் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சிவம் துபே களமிறக்கப்பட்டார். 

சிவம் துபே டக் அவுட்டானதே சந்தேகத்திற்குள்ளாகி உள்ள நிலையில், அதன்பின் ஜடேஜா வந்தது மேட்ச் ஃபிக்சிங் குற்றச்சாட்டுகளுக்கு வலு சேர்த்து உள்ளது.

நம்பர் 4 வரிசையில் ஜடேஜா களமிறங்கி இதுவரை பெரிதாக எந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியதில்லை. ஜடேஜா ஆட்டமிழந்த பின்னர் மிட்சலை களமிறக்காமல், சமீர் ரிஸ்வி வந்தார். 

ஏற்கனவே மிட்சல், தோனி, மொயின் அலி ஆகிய 3 பேட்ஸ்மேன்கள் இருக்கும் சூழலில், இம்பேக்ட் பிளேயரை பயன்படுத்த வேண்டிய தேவையே இல்லை.

ஸ்பின்னர்களை வெளுத்து வாங்கக்கூடிய சமீர் ரிஸ்வி, ஒரு சிக்ஸ் கூட அடிக்காமல் 23 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தார். இவ்வளவு சொதப்பல்ளுடன் சிஎஸ்கே அணி  இதுவரை விளையாடியது இல்லை.

தொடர்ந்து 2 பந்துகளில் வீசிய நிலையில் காயம் காரணமாக ஓய்வறைக்கு சென்ற தீபக் சஹர் தொடர்பில் சிஎஸ்கே அணி தரப்பில் எந்த விளக்கமும் கொடுக்கப்பட இல்லை.

அதேபோல் பதிரனா, துஷார் தேஷ்பாண்டே இருவரும் ஒரே போட்டியில் பெஞ்ச் செய்யப்பட்டது இந்த சந்தேகத்துக்கு காரணமாக உள்ளது.

அதேபோல், ஷஷாங்க் சிங் கொடுத்த கேட்சை லாங் ஆன் திசையில் நின்றிருந்த ருதுராஜ் கெய்க்வாட் எளிதாக பிடித்திருக்க முடியும் என்ற நிலையில், மிட் ஆனில் நின்றிருந்த டேரல் மிட்சல் பிடிக்கட்டும் என்று ருதுராஜ் கெய்க்வாட் இருந்ததும் சந்தேகத்துக்கு காரணமாக உள்ளது.

இவ்வாறான காரணங்ககை வைத்து சிஎஸ்கே - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டியில் மேட்ச் ஃபிக்சிங் நடந்திருக்க வாய்ப்புகள் உள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp