இந்தியா - பாகிஸ்தான் போட்டி: நீக்கப்பட்ட முக்கிய வீரர்.. பாகிஸ்தான் அணிக்கு ஏற்ப்பட்டுள்ள சிக்கல்!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி இன்று நடக்கவுள்ள நிலையில், பாகிஸ்தான் அணிக்கு பின்னடைவு ஏற்படும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் போட்டி: நீக்கப்பட்ட முக்கிய வீரர்.. பாகிஸ்தான் அணிக்கு ஏற்ப்பட்டுள்ள சிக்கல்!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி இன்று நடக்கவுள்ள நிலையில், பாகிஸ்தான் அணிக்கு பின்னடைவு ஏற்படும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

பாகிஸ்தான் அணியின் முக்கிய ஆல் - ரவுண்டரான இமாத் வாஸிம் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக உலகக் கோப்பை தொடரில் இருந்த நீக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 

அத்துடக், இந்திய அணிக்கு எதிரான போட்டி முக்கியமானது என்பதால் வலி நிவாரணி அளித்து அவரை போட்டியில் பங்கேற்க வைக்க முயற்சிகள் நடந்து வருகின்றதாகவும் சொல்லப்படுபடுகின்றது.

பாகிஸ்தான் டி20 அணியில் இடம் கிடைக்காமல் மனமுடைந்த நிலையில் இருந்த இமாத் வாஸிம், சில மாதங்கள் முன்பு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். 

எனினும், டி20 உலக கோப்பை தொடருக்கு முன்பாக அவரிடம் பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு அதிகாரிகள் அவரது ஓய்வை திரும்ப பெற்றுக் கொள்ள செய்தனர்.

பின்னர், அவர் டி20 உலக கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் சேர்க்கப்பட்ட நிலையில், அவர் பாகிஸ்தான் அணியின் முக்கிய ஆல் - ரவுண்டராக இருப்பார் என பார்க்கப்பட்டது. 

பல ஆண்டுகளாக கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் விளையாடி வருவதால் உலகக்கோப்பை நடக்கும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் மைதானங்கள் குறித்து இமாத் வாஸிமுக்கு அதிக அனுபவம் காணப்படுகின்றது.

அவருக்கு போட்டியின் போது காயம் ஏற்பட்டாலும், முக்கியமான போட்டி என்பதால் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் மட்டும் பங்கேற்க வைத்து போட்டி முடிந்தவுடன் அவரை பாகிஸ்தானுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகின்றது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp