ஆமை வேகத்தில் ரன் சேர்ப்பு... சொதப்பிய பாகிஸ்தான் அணி... மீண்டும் நிகழ்ந்த மோசமான சம்பவம்!
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோல்வி அடைந்து அதிர்ச்சி கொடுத்துள்ளது.

2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோல்வி அடைந்து அதிர்ச்சி கொடுத்துள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒரு முறை கூட பாகிஸ்தான் அணி வெற்றி பெறவில்லை என்ற மோசமான சம்பவம் மீண்டும் நிகழ்ந்துள்ளது.
பாகிஸ்தான் மற்றம் நியூசிலாந்து அணிகள் சாம்பியன்ஸ் டிராபியில் இதுவரை நான்கு முறை மோதி உள்ளதுடன், அந்த நான்கு முறையும் பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவி உள்ளது.
பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் முறையாக சந்தித்தன. அந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2009 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியதுடன், அந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
திடீரென்று அதிரடிக்கு மாறிய நியூசிலாந்து: பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட நிலை!
பாகிஸ்தானின் சொந்த மண்ணில் நேற்று நடந்த போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 320 ரன்கள் எடுத்தது.
அடுத்து ஆடிய பாகிஸ்தான் அணி ஆமை வேகத்தில் ரன் சேர்த்து சொதப்பியதுடன், 47.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 260 ரன்கள் மட்டுமே எடுத்தது.
நியூசிலாந்து அணிக்கு எதிராக ஆடிய கடைசி நான்கு ஒருநாள் போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்துள்ளதுடன், பாகிஸ்தானில் நடந்த முத்தரப்பு ஒருநாள் தொடரில் முதல் சுற்று மற்றும் இறுதிப் போட்டியிலும் நியூசிலாந்து அணியிடம் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தது.
இது பாகிஸ்தான் அணிக்கு தற்போது கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதுடன், குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள நியூசிலாந்து அணி புள்ளிப் பட்டியலில் இரண்டு புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளதுடன், பாகிஸ்தான் அணி ஒரு போட்டியில் தோல்வி அடைந்து கடைசி இடத்தில் உள்மை குறிப்பிடத்தக்கது.