டாசில் பாகிஸ்தான் வெற்றி.. முதலில் இந்தியா துடுப்பாட்டம்.. அணியில் மாற்றமில்லை

ஆடுகளத்தில் ஈரப்பதம் இருப்பதால் முதலில் பந்து வீச முடிவு செய்ததாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்தார்.

டாசில் பாகிஸ்தான் வெற்றி.. முதலில் இந்தியா துடுப்பாட்டம்.. அணியில் மாற்றமில்லை

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி மழை காரணமாக போட்டி தாமதமாக தொடங்கியது.

வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக மைதானம் என்பதால், முதலில் பந்து வீசும் அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக கணிக்கப்பட்ட நிலையில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம், முதலில் பந்து வீசுவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, தானும் முதலில் பந்துவீச்சை தான் தேர்வு செய்திருப்பேன் என்றும் ஆடுகளத்தை கண்காணித்து அதற்கு ஏற்ற வகையில் செயற்பட உள்ளதாக கூறினார்.

உலக கோப்பையில் அனைத்து போட்டிகளுமே மிகவும் முக்கியமானது என்றும், அனைத்து போட்டிகளும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று ரோகித் சர்மா கூறினார். 

ஆடுகளத்தில் ஈரப்பதம் இருப்பதால் முதலில் பந்து வீச முடிவு செய்ததாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்தார்.

நான்கு வேக பந்துவீச்சாளர்கள் உள்ளதால் களம் தங்களுக்கு சாதகமாக தான் அமையும். இந்தியா பாகிஸ்தான் போட்டி என்றாலே நிச்சயம் பெரிய ஆட்டம் தான். நாங்கள் இன்றைய ஆட்டத்திற்கு தயாராக இருக்கின்றோம் என்றும் அசாம் கான் விளையாடவில்லை என்றும் பாபர் அசாம் குறிப்பிட்டார்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp