ரோஹித் சர்மா செய்த படுமோசமான சாதனை... எந்த கேப்டனும் செய்ததே இல்லை!

ரோஹித் சர்மா, டெஸ்ட் போட்டிகளில் எதிரணியின் கேப்டனின் பந்துவீச்சில் அதிக முறை விக்கெட்டை பறிகொடுத்த கேப்டன் என்ற படுமோசமான சாதனையை செய்து இருக்கிறார்.

ரோஹித் சர்மா செய்த படுமோசமான சாதனை... எந்த கேப்டனும் செய்ததே இல்லை!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் படுமோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மிகவும் மோசமான சாதனை ஒன்றை செய்து இருக்கிறார். 

இந்த டெஸ்ட் தொடரில் அவர் ஐந்து இன்னிங்ஸ்களில் 31 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளதுடன், ரோஹித் சர்மாவின் பேட்டிங் சராசரி 6.20 ஆக உள்ளது. அத்துடன், அதிகபட்சமாக அவர் 10 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார்.

இந்த நிலையில் ரோஹித் சர்மா, டெஸ்ட் போட்டிகளில் எதிரணியின் கேப்டனின் பந்துவீச்சில் அதிக முறை விக்கெட்டை பறிகொடுத்த கேப்டன் என்ற படுமோசமான சாதனையை செய்து இருக்கிறார்.

இந்த டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் நான்கு முறை ரோஹித் சர்மாவின் விக்கெட்டை எடுத்தார். நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் கம்மின்ஸ் பந்துவீச்சில் ரோஹித் ஆட்டம் இழந்தார். 

இந்த தொடருக்கு முன்னதாக, இரண்டு முறை கம்மின்ஸ் பந்துவீச்சில் ரோஹித் சர்மா ஆட்டம் இழந்ததுடன், இதுவரை டெஸ்ட் போட்டிகளில் பாட் கம்மின்ஸ் பந்துவீச்சில் ரோஹித் சர்மா ஆறு முறை தனது விக்கெட் இழந்து இருக்கிறார்.

இதனையடுத்து, டெஸ்ட் போட்டிகளில் எதிரணி கேப்டனின் பந்துவீச்சில் அதிக முறை ஆட்டம் இழந்த கேப்டன்கள் பட்டியலில் ரோஹித் சர்மா முதல் இடத்தை பிடித்து உள்ளதுடன், முன்னதாக இங்கிலாந்து கேப்டன் டெட் டெக்ஸ்டர், ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ரிச்சி பெனாடின் பந்துவீச்சில் ஐந்து முறை ஆட்டம் இழந்து இருந்தார்.

அத்துடன், இந்திய அணியின் கேப்டனாக இருந்த சுனில் கவாஸ்கர், பாகிஸ்தான் அணியின் கேப்டன் இம்ரான் கான் பந்து வீச்சில் ஐந்து முறை ஆட்டம் இழந்து உள்ளார்.

இந்த இரண்டு மோசமான சாதனைகளை தற்போது ரோஹித் சர்மா முறியடித்து உள்ள நிலையில், இந்த டெஸ்ட் தொடருடன் ரோஹித் சர்மா ஓய்வை அறிவிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகின்றது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp