ஜெயசூர்யாவின் சாதனை காலி... 24 வருட ரெக்கார்ட் முறியடிப்பு... இரட்டை சதம் விளாசிய முதலாவது இலங்கை வீரர்!
இலங்கை மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி பவுலிங்கை தெரிவு செய்தது.
இலங்கை மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி பவுலிங்கை தெரிவு செய்தது.
இதையடுத்து இலங்கை அணியின் நிஷாங்கா - ஃபெர்னாண்டோ கூட்டணி ஆரம்ப வீரர்களாக களமிறங்கியதுடன், இருவரும் தொடக்கம் முதலே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
ஆனால் 8வது ஓவரிலேயே நிஷாங்க 2 ஃபோர்ஸ், ஒரு சிக்ஸ் அடித்து 19 ரன்களை விளாச அதிரடிக்கு திரும்பிய நிஷாங்க 31 பந்துகளில் அரைசதம் அடிக்க, மறுபக்கம் அவிஷ்க ஃபெர்னாண்டோ 55 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார்.
21 ஓவர்கள் முடிவிலேயே இலங்கை அணி 158 ரன்களை விளாசியது. முதல் விக்கெட்டுக்கு 182 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில், ஃபெர்னாண்டோ 88 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இருப்பினும் மற்றொரு தொடக்க வீரரான நிஷாங்க 88 பந்துகளில் சதம் ஆடித்து அசத்தினார்.
40 ஓவர்கள் வரை பவுண்டரி அடித்து வந்த நிஷாங்கா, 40வது ஓவருக்கு பின் சிக்சர்களை விளாச தொடங்கினார். இதனால் 116 பந்துகளிலேயே 150 ரன்களை கடந்தார். தொடர்ந்து கடைசி ஒவரின் 2வது பந்தில் பவுண்டரி விளாசிய நிஷாங்க, இரட்டை சதம் விளாசி சாதனை படைத்தார்.
இதன் மூலமாக ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் விளாசிய முதல் இலங்கை வீரர் என்ற சாதனையை படைத்தார். அதுமட்டுமல்லாமல் இலங்கை ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோரான ஜெயசூர்யாவின் 189 ரன்களை சாதனையையும் நிஷாங்கா முறியடித்துள்ளார்.
24 ஆண்டுகளுக்கு பின் இந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளதுடன், கடைசி வரை சிறப்பாக ஆடிய நிஷாங்கா 139 பந்துகளில் 20 ஃபோர்ஸ், 8 சிக்ஸ் உட்பட 210 ரன்களை சேர்த்து அசத்தினார்.
இதன் மூலம் இலங்கை அணி 50 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 381 ரன்களை பெற்றது.