இவர்களுக்கு இதுதான் கடைசி உலக கோப்பை.. இந்த ஐந்து வீரர்களும் வெற்றியுடன் செல்வார்களா?

இன்றைய ஆட்டத்தில் விளையாடும் ஐந்து வீரர்கள் இனி உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்க மாட்டார்கள். அந்த வீரர்கள் குறித்து பார்க்கலாம்.

இவர்களுக்கு இதுதான் கடைசி உலக கோப்பை.. இந்த ஐந்து வீரர்களும் வெற்றியுடன் செல்வார்களா?

இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் ஐசிசி உலக கோப்பை இறுதிப்போட்டியில் இன்று மதியம் 2 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்  பல பரிட்சை நடத்துகிறன.

இந்த நிலையில் இன்றைய ஆட்டத்தில் விளையாடும் ஐந்து வீரர்கள் இனி உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்க மாட்டார்கள். அந்த வீரர்கள் குறித்து பார்க்கலாம்.

இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா

இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவுக்கு தற்போது 36 வயது 203 நாட்கள் ஆகிறது. அடுத்த உலகக் கோப்பை நடைபெறும் போது ரோகித் சர்மாவுக்கு 40 வயதாகி இருக்கும். இதனால் ரோகித் சர்மா அடுத்த உலக கோப்பை தொடரில் பங்கேற்க முடியாது. 

எனவே இதுதான் இவருக்கு கடைசி உலகக் கோப்பை தொடராகும். இதில் அவர் வெற்றியுடன் வரலாற்று சாதனை படைத்து திரும்ப வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி

இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கும் இதுதான் கடைசி உலகக் கோப்பை போட்டியாகும். விராட் கோலிக்கு தற்போது 35 வயது 13 நாட்கள் ஆகிறது. அடுத்த உலக கோப்பை வரும்போது கோலிக்கு 39 வயதாகி இருக்கும்.

அப்போது அவர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு. இதனால் கோலி, சாம்பியன் பட்டத்தை வென்று வரலாற்று சாதனையுடன் உலக கோப்பைக்கு முழுக்கு போடுவார்.

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது சமி

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது சமிக்கும் இன்றுதான் கடைசி உலகக் கோப்பை போட்டியாகும். சமிக்கு தற்போது 33 வயதாகிறது. அடுத்த உலக கோப்பை வரும்போது அவருக்கு 37 வயதாகி இருக்கும். 

சமிக்கு ஏற்கனவே உடல் அளவில் நிறைய காயங்கள் ஏற்படுகிறது. இதனால் அவர் இன்னும் ஒரு ஆண்டுகளில் ஓய்வு பெற்று விடுவார் என்பதால் அடுத்த உலக கோப்பை வரை விளையாட வாய்ப்பு இல்லை. இதனால் சாம்பியன் பட்டத்துடன் அவர் திரும்புவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் டேவிட் வார்னர்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் டேவிட் வார்னருக்கு 37 வயது ஆகிறது. அடுத்த உலகக் கோப்பை நடைபெறும் போது அவருக்கு 41 வயதாகி இருக்கும். வார்னர் ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் திட்டத்தில் தான் இருக்கிறார். 

ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்மித்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்மித்துக்கு தற்போது 34 வயதாகிறது. அடுத்த உலகக் கோப்பை நடைபெறும் போது அவருக்கு 38 வயதாகி இருக்கும். ஆஸ்திரேலிய வீரர்கள் பெரும்பாலும் அவ்வளவு வயது வரை விளையாட மாட்டார்கள். மேலும் ஸ்மித்தும் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து விடைபெறும் எண்ணத்தில் தான் இருக்கிறார். 

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp