ஷமியை அடுத்து மற்றுமொரு நட்சத்திர வீரருக்கு காயம்.. இந்திய அணிக்கு தொடரும் சோதனை!

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் மோதவுள்ள ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் ஜனவரி 25ஆம் தேதி தொடங்க உள்ளது.

ஷமியை அடுத்து மற்றுமொரு நட்சத்திர வீரருக்கு காயம்.. இந்திய அணிக்கு தொடரும் சோதனை!

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் மோதவுள்ள ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் ஜனவரி 25ஆம் தேதி தொடங்க உள்ளது.

இம்முறை வெறும் 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி விளையாட உள்ளதுடன், நான்கு சுழற் பந்துவீச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

காயம் காரணமாக முகமது சமி இந்திய அணியில் விளையாடவில்லை. அவருக்கு கூடுதல் ஓய்வை பிசிசிஐ வழங்கி இருக்கிறது. 

இதனால், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான பிரசித் கிருஷ்ணாவுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இஷான் கிஷனுக்கு ஆப்பு உறுதியானது... இனி அவ்வளவுதான்... ரோஹித் சர்மா போட்ட மாஸ்ட் பிளான்!

ஆனால், ரஞ்சி கிரிக்கெட் போட்டி ஒன்றில் விளையாடும் போது துரதிஷ்டவசமாக காயம் அடைந்து விட்டார். 

குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் கர்நாடகா அணிக்காக விளையாடிய பிரசித் கிருஷ்ணா 14.5 ஓவர்களை வீசியபோது திடீரென்று காலில் காயம் ஏற்பட்டது. 

இதனால் பிரசித் கிருஷ்ணாவால் நடக்கக்கூட முடியவில்லை. பிரசித் கிருஷ்ணாவுக்கு தற்போது ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. பிரசித் கிருஷ்ணாவுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அவருக்கு இங்கிலாந்து எதிரான டெஸ்ட் தொடரில் வாய்ப்பு கிடைக்கவில்லை. 

அதற்கு பதில் அவேஷ் கானுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே இந்திய அணியில் நிறைய வீரர்களுக்கு காயம் ஏற்பட்டு உள்ள நிலையில், அந்த லிஸ்டில் பிரசித் கிருஷ்ணாவும் இணைந்துள்ளமை அணிக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp