பால் தேநீர் விலை அதிகரிப்பு - வெளியான அறிவிப்பு

ஏப்ரல் 1 ஆம் திகதிக்குள் 400 கிராம் பால் மா பாக்கெட்டின் சில்லறை விலை சுமார் 50 ரூபாயால் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

பால் தேநீர் விலை அதிகரிப்பு - வெளியான அறிவிப்பு

ஏப்ரல் முதலாம் தேதியில் இருந்து ஒரு கோப்பை பால் தேநீர் விலை 10 ரூபாயால் அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை சிற்றுண்டிசாலைகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் பால் மா விலை அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின்  தலைவர் ஹர்ஷனா ருக்ஷன் தெரிவித்துள்ளார்.

இதனால், ஏப்ரல் 1 ஆம் திகதிக்குள் 400 கிராம் பால் மா பாக்கெட்டின் சில்லறை விலை சுமார் 50 ரூபாயால் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.