தோனி விளையாட மாட்டார்... வெளியான முக்கிய தகவல்! எக்கச்சக்க மாற்றங்களுக்கு வாய்ப்பு!

சிஎஸ்கே பேட்டிங்கை பொறுத்தவரை ரச்சின், கான்வே, ருதுராஜ், தூபே மீதுதான் மொத்த நம்பிக்கையும் உள்ளது. விஜய் சங்கர் இன்னும் பெரிதாக செட் ஆகவில்லை. 

தோனி விளையாட மாட்டார்... வெளியான முக்கிய தகவல்! எக்கச்சக்க மாற்றங்களுக்கு வாய்ப்பு!

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றாலும் கூட அடுத்தடுத்து ஹாட்ரிக் தோல்வியை அடைந்துள்ளது.

இதனால், 9வது இடத்தில் தற்போது தத்தளித்து வருகிறது. மிடில் ஆர்டர் பார்க்கவே பலவீனமாக இருந்தாலும், பலமாக காணப்பட்ட டாப் ஆர்டரும் தொடர்ந்து சொதப்பி வருகிறது. 

சிஎஸ்கே பேட்டிங்கை பொறுத்தவரை ரச்சின், கான்வே, ருதுராஜ், தூபே மீதுதான் மொத்த நம்பிக்கையும் உள்ளது. விஜய் சங்கர் இன்னும் பெரிதாக செட் ஆகவில்லை. 

ஜடேஜா - அஸ்வின் ஆகியோர் ஆல்-ரவுண்டர்கள் என்றாலும் அவர்கள் டி20 அரங்கில் பேட்டிங்கில் பெரியளவில் ரன்கள் குவித்து நீண்ட நாள்கள் ஆகிவிட்டது. இவர்கள் பந்துவீச்சுக்காகவே அணியில் இருப்பவர்கள். 

பேட்டிங் இந்தளவிற்கு ஊசலாடிக்கொண்டிருக்கையில் நம்பர் 7 வீரராக களமிறங்கும் தோனியும் பெரியளவில் கைக்கொடுக்காதது மேலும் பெரிய சறுக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.

இதனால் பலரும் தோனி ஓய்வை அறிவிக்க வேண்டும் என்றும் அவருக்கு பதில் இளம் வீரர் ஒருவர் மீது நம்பிக்கை வைத்து சிஎஸ்கே அணி களமிறக்க வேண்டும் என பலரும் விமர்சித்து வருகின்றனர். 

தோனி விக்கெட் கீப்பிங்கில் மாஸ்டராக வலம் வந்துகொண்டிருந்தாலும் பேட்டிங்கில் சொதப்புவதால் அவருக்கு பதில் வேறொருவரை அந்த இடத்தில் விளையாட வைக்க வேண்டும் என கூறி வருகின்றனர்.

அந்த வகையில், முன்னாள் கிரிக்கெட் வீரரும், கிரிக்கெட் பயிற்சியாளருமான லட்சுமி நாராயணன் அளித்த பிரத்யேக பேட்டியில்,"தோனியே அடுத்த போட்டியில் விளையாடுவாரா என்பது தெரியவில்லை. 

சிஎஸ்கே அணி நிர்வாகத்திடம் இருந்து எனக்கு அரசல்புரசலாக வந்த தகவலின்படி, தோனி ஒரு சிறிய இடைவேளையை எடுக்க நினைக்கிறார். ஒருமுறை போட்டியை வெளியே அமர்ந்து பார்க்க வேண்டும் என தோனி விருப்பப்படுகிறார்.

எனவே, டெவான் கான்வே விக்கெட் கீப்பராக வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. எக்கச்சக்க மாற்றங்களுக்கு வாய்ப்பிருக்கிறது" என்றார். 
ஷேக் ரஷீத், வன்ஷ் பேடி, அன்ஷூல் கம்போஜ் போன்ற இளம் வீரர்களுக்கு சிஎஸ்கே அணி வாய்ப்பளிக்கலாம் என்றும் அவர் கூறினார்.