அஸ்வின் இடத்தை நிரப்ப காத்திருக்கும் 3 வீரர்கள்.. யாருக்கு வாய்ப்பு?
இனி சொந்த மண்ணில் இந்திய அணி விளையாடும் போது அஸ்வின் இல்லாத குறை உணரப்படும் என்ற நிலையில் அஸ்வின் இடத்தை நிரப்ப வாய்ப்பு இருக்கும் மூன்று வீரர்கள் குறித்து பார்க்கலாம்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற் பந்துவீச்சாளரான அஸ்வின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள நிலையில், இந்திய அணியின் பந்துவீச்சில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட போகின்றது.
இனி சொந்த மண்ணில் இந்திய அணி விளையாடும் போது அஸ்வின் இல்லாத குறை உணரப்படும் என்ற நிலையில் அஸ்வின் இடத்தை நிரப்ப வாய்ப்பு இருக்கும் மூன்று வீரர்கள் குறித்து பார்க்கலாம்.
இந்த பட்டியலில் முதலிடத்தில் வாஷிங்டன் சுந்தர் இருக்கின்றார். தமிழகத்தைச் சேர்ந்த 25 வயதான வாஷிங்டன் சுந்தர் ஏற்கனவே இந்திய அணிக்காக ஏழு டெஸ்ட், 22 ஒருநாள் மற்றும் 52 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.
இருந்தாலும், வாஷிங்டன் சுந்தருக்கு தொடர் வாய்ப்பு கிடைக்காது இருந்த நிலையில், தற்போது அஸ்வின் வெளியேறியுள்ள நிலையில் வாஷிங்டன் சுந்தருக்கு நிரந்தர வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டாவது இடத்தில் 30 வயதாக இருக்கும் குல்தீப் யாதவ் உள்ளதுடன், அவர் இந்திய அணிக்காக 13 டெஸ்ட், 106 ஒரு நாள் மற்றும் 40 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். குல்தீப் யாதவ்க்கு போதிய வாய்ப்பு வழங்கப்பட்டால் அவர் நிச்சயம் டெஸ்ட் கிரிக்கெட்டில் பிரகாசிப்பார்.
மூன்றாம் இடத்தில் மானவ் சுதான் உள்ளதுடன், இவர் இடது கையில் சுழற் பந்து வீசக்கூடியவர். இதுவரை 21 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 86 விக்கெட்டுகளை வீழ்த்திருக்கிறார். 663 ரன்கள் அடித்திருக்கிறார்.
இவர்கள் தவிர அக்சர் பட்டேலும் வாய்ப்புக்காக காத்து இருந்தாலும், ஜடேஜாவை போலவே அக்சர் பட்டேலும், இடது கை சுழற்பந்து வீச்சாளர் என்பதால் அவருக்கு அணியில் உடனடியாக வாய்ப்பு கிடைப்பது கொஞ்சம் கடினமான விடயம் என்பது குறிப்பிடத்தக்கது.