அவர்களை மட்டும் நம்பினால் ஆபத்து.. இளம் வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்த அஸ்வின்!
இளம் வீரர்கள் அணியின் பயிற்சியாளர்களை மட்டுமே நம்பி இருந்தால் அது ஆபத்து என தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
இளம் வீரர்கள் அணியின் பயிற்சியாளர்களை மட்டுமே நம்பி இருந்தால் அது ஆபத்து என தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
ஒரு காலத்தில் கிரிக்கெட் அணியில் பயிற்சியாளர் என்று ஒருவரே இல்லாமல் போவார் என்றும் மேலாளர் என்பவர் மட்டும்தான் இருப்பார் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்திய அணி இவ்வாறான நிலையில்தான் 1983ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரை வென்றது என்றும், பின்னர் வந்த காலங்களில்தான் பயிற்சியாளர் என்ற பதவி கிரிக்கெட்டுக்குள் நுழைந்தாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பேட்டிங், பந்துவீச்சு, பில்டி, மனதை வலிமையாக வைத்துக் கொள்ள, உடற்பயிற்சிக்கு என என தனித்தனியாக பயிற்சியாளர் தற்போது வந்து விட்டார்கள்.
அத்துடன், சில வீரர்கள் தனியாக சில பயிற்சியாளர்களை வைத்து கிரிக்கெட் கற்று வரும் நிலையில் தான் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கிறார்.
“பல வீரர்கள் தற்போது பயிற்சியாளரை நம்பியே கிரிக்கெட் விளையாடி வருகிறார்கள். இது நிச்சயம் ஒரு ஆபத்தான வழிமுறை. எப்போதுமே யாரையும் சார்ந்து நாம் இருக்கக் கூடாது. ஒருவரை சார்ந்து நீங்கள் விளையாடி வந்தால் உங்களுக்கு என்று புதிய யோசனைகள் எதுவுமே வராது.
பயிற்சியாளர் கூறும் வழிகள் ஒரு வீரருக்கு சரியாக பொருந்துகிறது என்றால் அது மற்ற வீரருக்கும் சரியாக பயன்படும் என்பது கிடையாது.
ஒரு வீரருக்கு ஏதோ ஒரு யுக்தி சரியாக செயல்பட்டது என்றால் அதையே யுக்தியை மற்ற கிரிக்கெட் வீரர்களும் காப்பியடிக்க வேண்டும் என பயிற்சியாளர்கள் சொல்வது எனக்கு பிடிக்காது.
கிரிக்கெட் வீரர்களுக்கு மற்றவர்கள் உதவி தேவைப்படும். ஆனால் அவர்களை வாழ்க்கை முழுவதும் வழிநடத்த கூடாது.
நான் கிரிக்கெட் வீரராக இருந்தபோது டபுள்யூ வி ராமன் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். அவர் எனக்கு பல வழிகளை காட்டினார். அதில் எந்த வழி சிறந்தது என்பதை நானே தான் தேர்ந்தெடுத்தேன். ஆனால், நான் அவரையே சார்ந்து செயல்படவில்லை.
உங்கள் விளையாட்டு தொடர்பான விழிப்புணர்வு உங்களிடம் இல்லை என்றால் அது மிகவும் ஆபத்தானது. இதற்காக பயிற்சியாளர்கள் இருக்கும் வீரர்கள் அவர்களே சார்ந்து விளையாடி சாதித்தது கிடையாதா என்று கேட்டால் நிச்சயமாக நான் இல்லை என்று சொல்ல மாட்டேன்” என்று அஸ்வின் கூறியுள்ளார்.