அஸ்வின் செய்த மாபெரும் சாதனை... ஜாம்பவான் ரெக்கார்ட் தகர்ப்பு

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற மிகவும் முக்கிய பங்காற்றியவர் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின்.

அஸ்வின் செய்த மாபெரும் சாதனை... ஜாம்பவான் ரெக்கார்ட் தகர்ப்பு

சென்னை: வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற மிகவும் முக்கிய பங்காற்றியவர் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின். அவரது பேட்டிங் மற்றும் பந்துவீச்சு திறமைகளால் இந்தியா பிரமாண்ட வெற்றியை பதிவு செய்தது.

சொந்த மண்ணான சென்னையில் விளையாடிய அஸ்வின், பந்துவீச்சில் முதல் இன்னிங்ஸில் சற்றே பின்தங்கியிருந்தாலும், இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். 88 ரன்கள் மட்டுமே வழங்கி அவர் எடுத்த விக்கெட்டுகள் வங்கதேச அணியை சுருண்டடிக்கச் செய்தது.

92 வருட டெஸ்ட் வரலாற்றில் தரமான சாதனை... அதிக வெற்றிகளை குவித்தது இந்திய அணி

இந்த வெற்றியுடன் அஸ்வின் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். உலகின் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில், 522 விக்கெட்டுகளுடன் அஸ்வின் எட்டாவது இடத்தில் உள்ளார். இதனால், 519 விக்கெட்டுகளை வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கோர்ட்னி வால்சின் சாதனையை முறியடித்துள்ளார்.

மேலும், அஸ்வின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தினால், ஆஸ்திரேலிய சுழற் பந்துவீச்சாளர் நாதன் லயனின் 530 விக்கெட்டுகளைக் கடந்து, ஏழாவது இடத்தை பிடிக்க வாய்ப்பு உள்ளது. லயன் தற்போது 129 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 530 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

இல்லை என்று நினைத்த சாதனையையும் அஸ்வின் நிகழ்த்தியுள்ளார். ஒரு மைதானத்தில் இரண்டு முறை சதம் அடித்து, ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே வீரர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றுள்ளார். இது 147 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட்டில் யாரும் அடையாத சாதனையாகும்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp