மெகா சாதனை படைத்த அஸ்வின்... அனில் கும்ப்ளே ரெக்கார்ட் தகர்ப்பு.. ஆசிய அளவில் அதிக விக்கெட்
அனில் கும்ப்ளே 419 விக்கெட்களுடன் மூன்றாவது இடத்தில் இருப்பதுடன், அனில் கும்ப்ளேவின் சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் முறியடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா - வங்கதேச அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் இந்திய அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், ஜாம்பவான் அனில் கும்ப்ளேவின் சாதனையையும் தகர்த்து பிரம்மாண்ட சாதனை படைத்து உள்ளார்.
கான்பூரில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில், வங்கதேச வீரர் ஷான்டோவின் விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தினார்.
மழையால் சொதப்பிய ஆட்டம்... சோகத்தில் ரோஹித் சர்மா... ஆரம்பமே இப்படியா!
இது ஆசியாவில் அஸ்வின் வீழ்த்திய 420 வது விக்கெட் என்ற நிலையில், அவர் முக்கிய சாதனை ஒன்றை உடைத்துஆசியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்து வீச்சாளர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறி இருக்கிறார்.
இந்த பட்டியலில் 612 விக்கெட் வீழ்த்தி முத்தையா முரளிதரன் முதல் இடத்தில் இருக்கும் நிலையில், ரவிச்சந்திரன் அஸ்வின் 420 விக்கெட்களுடன் இரண்டாவது இடத்தை பிடித்து இருக்கிறார்.
அத்துடன், அனில் கும்ப்ளே 419 விக்கெட்களுடன் மூன்றாவது இடத்தில் இருப்பதுடன், அனில் கும்ப்ளேவின் சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் முறியடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பட்டியலில் மற்றொரு இலங்கை சுழற் பந்துவீச்சாளர் ரங்கன ஹெராத் 354 விக்கெட்களை வீழ்த்தி நான்காவது இடத்திலும், ஹர்பஜன் சிங் 300 விக்கெட்களுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.
இதேவேளை, ஆசியாவில் அதிக விக்கெட்களை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்களின் பட்டியலில் 420 விக்கெட்களுடன் அஸ்வின் முதல் இடத்தை பிடித்து உள்ளார்.
இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் நிறுத்தப்பட்ட நிலையில், வங்கதேச அணி 35 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்து உள்ளது.