இந்திய அணியின் பயிற்சியாளராக வருகிறாரா தல தோனி? வெளியான தகவல்!

இந்திய அணி பயிற்சியாளராக வருபவர் இந்தியராக இருக்க வேண்டும். தோனி ஓய்வை அறிவித்து விட்டால் அவர் இந்த பதவிக்கு சிறந்த ஒருவராக இருப்பார்.

இந்திய அணியின் பயிற்சியாளராக வருகிறாரா தல தோனி? வெளியான தகவல்!

இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு தோனி சரியான நபராக இருப்பார் என்றும் அவர் பெரிய தொடர்களை வென்று கொடுத்துள்ளதால் அவரை பயிற்சியாளராக நியமிக்கலாம் என விராட் கோலி சிறுவயது பயிற்சியாளரு் ராஜ்குமார் சர்மா கூறி உள்ளார்.

2025 ஐபிஎல் தொடரில் தோனி  விளையாடுவார் என எதிர்பார்ப்பதாக சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் அண்மையில் கூறிய நிலையில் தான் ராஜ்குமார் சர்மா இப்போது இந்த தகவலை சொல்லி உள்ளார்.

இது பற்றி அவர் பேசியபோது, "இந்திய அணி பயிற்சியாளராக வருபவர் இந்தியராக இருக்க வேண்டும். தோனி ஓய்வை அறிவித்து விட்டால் அவர் இந்த பதவிக்கு சிறந்த ஒருவராக இருப்பார்." என்றார்.

அத்துடன், இந்திய அணியின் பயிற்சியாளராக தோனி நியமிக்கப்பட்டால் இந்திய வீரர்கள் மத்தியில் அவருக்கு அதிக மரியாதை கிடைக்கும் என்றும், அவர் அணியை சரியாக திட்டமிட்டு, முறையாக கையாள்வார் என்றும் அவர் கூறியுள்ளார்.

சச்சின் டெண்டுல்கர், வீரேந்தர் சேவாக், ராகுல் டிராவிட், ஹர்பஜன் சிங், கவுதம் கம்பீர் மற்றும் யுவராஜ் சிங் போன்ற பெரிய வீரர்கள் அணியில் இருந்த நிலையில், தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டபோது அணியை சிறப்பாக வழிநடத்தியதையும் ராஜ்குமார் சர்மா சுட்டிக்காட்டி இருக்கின்றார்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp