3 மணிநேரம் 10 பக்க வாக்குமூலமளித்த ரணில் விக்கிரமசிங்க
இன்று காலை 9.15 மணியளவில் ஆணைக்குழுவில் முன்னிலையான ரணில் விக்கிரமசிங்க மதியம் 12.25 மணியளவில் அங்கிருந்து வெளியேறினார்

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மூன்று மணி நேரம் வாக்குமூலம் அளித்தார்.
இன்று காலை 9.15 மணியளவில் ஆணைக்குழுவில் முன்னிலையான ரணில் விக்கிரமசிங்க மதியம் 12.25 மணியளவில் அங்கிருந்து வெளியேறினார்
ஊவா மாகாண முதலமைச்சராக சாமர சம்பத் தசநாயக்க பதவி வகித்த காலத்தில், தேசிய சேமிப்பு வங்கியில் வைத்திருந்த நிலையான வைப்புத்தொகையை திரும்பப் பெற்ற சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
வாக்குமூலத்தைப் பதிவுசெய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் ஜனாதிபதியின் சட்டத்தரணி, ரணில் விக்கிரமசிங்க இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் 10 பக்க வாக்குமூலத்தை இன்று வழங்கியதாகத் தெரிவித்தார்.