கோலியின் திட்டம் சரிவரவில்லை... பாகிஸ்தான் வீரர் கடும் விமர்சனம்

நடப்பு டி20 உலகக் கோப்பையில் மிக மோசமான ஃபார்மில் விராட் கோலி இந்த சீசனில் 7 போட்டிகளில் 75 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 10.71 மட்டுமே.

இந்த நிலையில் முன்னாள் பாகிஸ்தான் அணியின் கேப்டன் ரஷீத் லத்தீப் ஏன் விராட் கோலியால் ரன் குவிக்க முடியவில்லை என்பது குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.

அரை இறுதி போட்டியில் விராட் கோலி 9 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தது குறித்து பேசிய ரஷீத் லத்தீப், "இது பெங்களூர் பிட்ச் கிடையாது. 

இந்த தரையில் பந்துகளை அடித்து ஆட முடியாது. அது அவ்வளவு எளிதல்ல. பேட்ஸ்மேன்களுக்கு இந்த பிட்ச்சில் நிறைய பிரச்சனைகள் உள்ளன. அத்தனை எளிதாக இங்கே ரன் குவிக்க முடியாது" என்றார்.

மேலும்,  "ரோஹித் சர்மா நிறைய கடினமான விஷயங்களை சந்தித்தார். முதலில் டாஸில் அவர் தோல்வியடைந்தார். அதன் பின்பு முதலில் பேட்டிங் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. 

விராட் கோலி விரைவில் ஆட்டம் இழந்து விட்டார். போட்டியில் மழை குறுக்கிட்டது. அந்த நேரம் மிகவும் மோசமானது. அம்பயர்களுக்காக நாம் காத்திருக்க வேண்டும். 

சூப்பர் சாப்பர் மைதானத்தை விரைவில் சீராக்க வேண்டும். அதன் பின் நாம் மீண்டும் வந்து பேட்டிங் செய்ய வேண்டும். அந்த கடினமான நிலையிலும் ரோஹித் சிறப்பாக ஆடினார்" என்றார் ரஷீத் லத்திப்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp