பாகிஸ்தான் அணியில் பிளவு? பாபர் - அப்ரிடிக்கும் மோதலா? நடந்தது என்ன?
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக தான் அந்த அணி தொடர்ந்து அடி பாதாளத்திற்கு சென்று கொண்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது. பாகிஸ்தான் அணியில் வீரர்களுக்கு மத்தியில் பெரிய அளவு பிரச்சனை இருப்பதாக தெரிகிறது.
மும்பை : பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக தான் அந்த அணி தொடர்ந்து அடி பாதாளத்திற்கு சென்று கொண்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது. பாகிஸ்தான் அணியில் வீரர்களுக்கு மத்தியில் பெரிய அளவு பிரச்சனை இருப்பதாக தெரிகிறது.
இதற்கு முக்கிய காரணம் கேப்டன் பதவியில் இருந்து பாபர் அசாம் ராஜினாமா செய்த நிலையில் அந்த பொறுப்புக்கு வந்தார். இதனை அடுத்து மீண்டும் ஷாகின் அப்ரிடி நீக்கப்பட்டு பாபர் அசாம் இடம் கேப்டன் பதவி வந்தது. எனினும் டெஸ்ட் கிரிக்கெட்டின் கேப்டனாக ஷான் மகசூத் நியமிக்கப்பட்டார்.
இதனால் ஷாகின் அப்ரிடி தமது கேப்டன் பதவி பறிக்கப்பட்டதை அடுத்து அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் பாபர் அசாம் மற்றும் ஷாகின் ஆப்ரிடி அவர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்வதில்லை என்ற செய்தி வெளியானது.
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்த நிலையில் ஷாகின் அப்ரிடி அணியில் உள்ள சீனியர் வீரர்களிடம் மோதலில் ஈடுபட்டதாகவும் அது கைகலப்பில் போய் முடிந்ததாகவும் கூறப்பட்டது.
இதனால் தான் ஷாகின் அப்ரிடி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார் என்று கூறப்படுகிறது. 2022 டி20 உலக கோப்பை இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் அணி தகுதி பெற்ற பிறகு நடைபெற்ற எந்த தொடரிலும் பாகிஸ்தான் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. மேலும் பாகிஸ்தான் அணியின் ஸ்டார் வீரர்கள் யாரும் பெரிய அளவில் சரியாக விளையாடுவதில்லை.
இதனால் அணியில் பிளவு ஈகோ என அனைத்து பிரச்சனைகளும் இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஜாகா அசரப், அணியில் எந்த ஒரு பிளவும் இல்லை என்று தெரிவித்திருக்கிறார். இது குறித்து பேசிய அவர் பாபர் அஸ்ஸாமுக்கும் ஷாகின் அப்ரிடிக்கும் எந்த ஒரு கருத்து வேறுபாடும் இல்லை.
நான் ஷாகின் அப்ரீடியை டி20 கேப்டனாக நியமித்தேன். அப்போது கூட அணியில் ஒற்றுமைக்கு பங்கம் வரவில்லை. மாறாக அணியில் ஒவ்வொரு வீரர்களும் ஒற்றுமையுடன் இருந்தார்கள். நாங்கள் பாபர் அசாமிடம் நீங்கள் சாதாரண ஒரு வீரராக விளையாடுங்கள் என்று கூறினேன். கேப்டனாக உங்களுடைய செயல்பாடு சரி இல்லை என்று அவரிடம் விமர்சனத்தை வைத்தேன்.
இதை ஏற்றுக்கொண்ட பாபர் அசாம் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். இதேபோன்று ஷான் மசூதை டெஸ்ட் அணியின் கேப்டன் ஆக தாம் தான் நியமித்தேன். அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரிய அளவில் சாதிக்கவில்லை என்றாலும் நான் எடுத்த முடிவு சரி என்று தான் நினைக்கின்றேன். அது மட்டுமில்லாமல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் சிறந்த வீரராக விளங்குகிறார். எனவே தாம் எடுத்த முடிவில் எந்த ஒரு தவறும் இல்லை. பாகிஸ்தான் அணி மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பும் என்று தாம் நம்புவதாக அவர் கூறியுள்ளார்.