சொதப்பிய அஸ்வின்... இதுவரை இப்படி நடந்ததே இல்லை...! முதல் முறையாக நடந்த சம்பவம்!
நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகள் மோதிய மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை.
நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகள் மோதிய மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை.
ஜடேஜா 5 விக்கெட்களும், வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்களும், ஆகாஷ் தீப் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதற்கு முன்னர் ஒரு முறை கூட நியூசிலாந்து அணி ஆல் அவுட் ஆன இன்னிங்ஸில் அஸ்வின் விக்கெட் வீழ்த்தாமல் இருந்ததில்லை.
நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த தொடரில் 5 ஐந்து இன்னிங்ஸ்களில் 6 விக்கெட் மட்டுமே அஸ்வின் வீழ்த்தியுள்ளதுடன், ஜடேஜா 5 இன்னிங்ஸ்களில் 11 விக்கெட்களும், வாஷிங்டன் சுந்தர் மூன்று இன்னிங்ஸ்களில் 15 விக்கெட்களும் வீழ்த்தி உள்ளனர்.
அத்துடன், நியூசிலாந்து அணி சார்பில் மிட்செல் சான்ட்னர் இரண்டு இன்னிங்ஸ்களில் 13 விக்கெட் வீழ்த்தி இருக்கின்றார்.
முன்னதாக அஸ்வின் நியூசிலாந்து அணிக்கு எதிராக 22 இன்னிங்ஸ்களில் 72 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார். ஆனால், இந்த தொடரில் வெறும் 6 விக்கெட்கள் மட்டுமே வீழ்த்தி இருப்பது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியில் வில் யங் 71 ரன்களும், டேரில் மிட்செல் 82 ரன்களும் எடுக்க அந்த அணி 235 ரன்கள் எடுத்தது.
ஜடேஜா 22 ஓவர்களில் 65 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்கள் வீழ்த்தினார். வாஷிங்டன் சுந்தர் 18.4 ஓவர்களில் 4 விக்கெட்கள் வீழ்த்தினார். ஆகாஷ் தீப் ஒரு விக்கெட் வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.