ரவிச்சந்திரன் அஸ்வின் திடீரென ஓய்வை அறிவித்த காரணம் என்ன?
ஆஸ்ரேலியா அணிக்கு எதிராக நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் 3-வது போட்டி முடிந்த பிறகு இந்த அறிவிப்பை அஸ்வின் வெளியிட்டுள்ளார்.
சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்துள்ளார்.
ஆஸ்ரேலியா அணிக்கு எதிராக நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் 3-வது போட்டி முடிந்த பிறகு இந்த அறிவிப்பை அஸ்வின் வெளியிட்டுள்ளார்.
அவரது ஓய்வுக்கு முன், தலைமை பயிற்சியாளர் கம்பீர் அவருடன் நீண்ட நேரம் பேசிய பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அவர் தனது ஓய்வை அறிவித்தார். தொடர்ந்து அவருடைய ஓய்வு பற்றிய அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
அஸ்வின் திடீர் ஓய்வுக்கு காரணம் என்ன?
அஸ்வினின் ஓய்வு முடிவானது திடீரென எடுத்த முடிவு அல்ல. அவர் தனது உடல் நலனையும், அணிக்கான பங்களிப்பையும் புரிந்துகொண்டு இப்படியான முடிவை எடுத்திருக்கிறார்.
அவருக்கு முழங்காலில் பிரச்சினை இருப்பதன் காரணமாக வெளிநாட்டு தொடர்களில் சரியான பங்களிப்பை கொடுக்கமுடியவில்லை. எனவே,இதன் காரணமாக தான் இந்த முடிவை அஸ்வின் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஓய்வு பெறவேண்டும் என்பதை அவர் 18 மாதங்களுக்கு முன்பே யோசித்து வைத்திருந்ததாகவும் இது தான் அவருடைய ஓய்வுகாண காரணம் எனவும் சொல்லப்படுகிறது.
மேலும், இது வரை இந்திய அணிக்காக மொத்தம் 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அஸ்வின் 537 விக்கெட்டுகளை வீழ்த்தி, சர்வதேசப் போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய 2 ஆவது வீரர் என்ற சாதனையை படைத்திருக்கிறார்.
சர்வதேச வீரர்கள் பட்டியலில் 7 ஆவது இடத்திலும் உள்ள அவர், டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 6 சதங்கள் உள்பட 3,506 ரன்கள் குவித்துள்ளார். மேலும், 116 ஒரு நாள் போட்டிகள் விளையாடிய அஸ்வின் 63 இன்னிங்ஸ் பேட்டிங் செய்து 707 ரன்கள் எடுத்துள்ளார்.
அதே சமயம் 156 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அதைப்போல 65 டி20 போட்டிகள் விளையாடிய அவர் 72 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
சர்வதேச போட்டிகளில் இருந்து மட்டுமே அஸ்வின் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள நிலையில், ஐபிஎல் போட்டிகளில் இன்னும் சில ஆண்டுகள் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.