3ஆவது டெஸ்டில் இருந்து திடீரென விலகிய அஸ்வின்... பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பு!
இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் 3வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிற நிலையில், முதலில் ஆடிய இந்திய அணி 445 ரன்களை குவித்தது.
இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் 3வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிற நிலையில், முதலில் ஆடிய இந்திய அணி 445 ரன்களை குவித்தது.
ரோகித் சர்மா 131 ரன்களும், ஜடேஜா 112 ரன்களும் விளாசிய நிலையில், இங்கிலாந்து அணி தரப்பில் மார்க் வுட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பதிலுக்கு களமிறங்கிய இங்கிலாந்து அணி 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 207 ரன்கள் சேர்த்துள்ளதுடன், நேற்றைய ஆட்டத்தில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 500வது விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார்.
இந்த நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இருந்து அஸ்வின் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளமை ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரவிச்சந்திரன் அஸ்வின், தனது குடும்ப உறுப்பினர்களின் மருத்துவ அவசரநிலை காரணமாக உடனடியாக டெஸ்ட் அணியில் இருந்து விலகுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
“இந்திய அணி வீரர்களின் குடும்பத்தினரின் நலன் மற்றும் ஆரோக்கியம் மிக முக்கியமானது. வீரர்களின் தனியுரிமையை மதிக்க வேண்டும். அவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு பிசிசிஐ எப்போதும் தயாராக இருக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
500ஆவது விக்கெட்டை வீழ்த்திய பின் செய்தியாளர்கள் சந்திப்பில் மகிழ்ச்சியுடன் காணப்பட்ட அஸ்வின் திடீரென விலகியதால் ரசிகர்களிடையே குழப்பதில் உள்ளனர்.