இன்னும் 10  போட்டிகள் மட்டுமே... பிசிசிஐ மற்றும் கம்பீர் தீர்மானம், விரைவில் அஸ்வின் ஓய்வு?

இந்திய டெஸ்ட் அணியின் முக்கிய சுழற் பந்துவீச்சாளராக இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு 38 வயது ஆகிற நிலையில் அவர் ஓய்வு பெறும் காலமும் நெருங்கி விட்டது. 

இன்னும் 10  போட்டிகள் மட்டுமே... பிசிசிஐ மற்றும் கம்பீர் தீர்மானம், விரைவில் அஸ்வின் ஓய்வு?

இந்திய டெஸ்ட் அணியின் முக்கிய சுழற் பந்துவீச்சாளராக இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு 38 வயது ஆகிற நிலையில் அவர் ஓய்வு பெறும் காலமும் நெருங்கி விட்டது. 

இந்திய அணியின் அனில் கும்ப்ளேவுக்கு இணையாக இருக்கும் ஒரே சுழற் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் மட்டுமே என்ற நிலையில், அவர் டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்களுக்கும் அதிகமாக வீழ்த்தி இருக்கிறார். 

இன்னும் ஐந்து மாதங்களில் ஓய்வு பெறக்கூடிய சூழ்நிலையில் இந்திய அணி அடுத்த ஐந்து மாதங்களில் 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. 

வங்கதேச அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை அடுத்து நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட தொடரிலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட தொடரிலும் இந்திய அணி விளையாட இருக்கின்றது.

இதனையடுத்து, 2023 - 25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி நடைபெறுவதுடன், அதன் முடிவில் இந்திய அணியின் மூத்த வீரர்கள் சிலர் ஓய்வு பெறுவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், டெஸ்ட் அணியில் அடுத்த தலைமுறை வீரர்களை உருவாக்கும் வகையில் வயதான வீரர்களை இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருடன் அணியில் இருந்து நீக்க பிசிசிஐ மற்றும் பயிற்சியாளர் கம்பீர் தீர்மானித்து உள்ளதாக கூறப்படுகின்றது.

38 வயதாகும் அஸ்வினால் இன்னும் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் மட்டுமே அணியில் தாக்குப் பிடிக்க முடியும் என்ற நிலையில் அவர் இன்னும் ஐந்து மாதங்களில் இந்திய அணியில் இருந்து நீக்கப்படலாம் அல்லது அவராகவே ஓய்வை அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல், சாய் கிஷோர், வாஷிங்டன் சுந்தர் என பல சுழற் பந்துவீச்சாளர்கள் இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்புக்காக காத்துக் கொண்டு உள்ளனர்.

எனவே, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருடன் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து அஸ்வின் ஓய்வு பெற வாய்ப்பு உள்ளதாக கிரிக்கெட் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...