அஸ்வினை தொடர்ந்து கோலி, ரோகித் விரைவில் ஓய்வு – இந்திய அணியில் ஏற்படவுள்ள மாற்றம்!
இந்த ஆண்டின் முற்பகுதியில் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கோலி, ரோகித் மற்றும் ஜடேஜா போன்றவர்கள் அறிவித்திருந்தனர்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுதாக இந்திய அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவித்துள்ள நிலையில், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா போன்றவர்கள் விரைவில் ஓய்வை அறிவிக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் முற்பகுதியில் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கோலி, ரோகித் மற்றும் ஜடேஜா போன்றவர்கள் அறிவித்திருந்தனர்.
ரோகித் தனது கடைசி 11 இன்னிங்ஸ்களில் சராசரியாக 11.69 என்ற ரீதியில் ஓட்டங்களை குவித்துள்ளதுடன், ரோகித்தின் துடுப்பாட்டம் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
அத்துடன். அவுஸ்திரேலியாவிற்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கோலி சிறப்பாக செயல்படவில்லை. பெர்த்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸ் மட்டும் சதம் அடித்திருந்தார்.
இந்நிலையில், கோலி மற்றும் ரோகித் இருவரும் அடுத்த மாத தொடக்கத்தில் சிட்னியில் தங்கள் கடைசி டெஸ்டில் விளையாட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்த பின்னர், இந்திய அணிக்கு அடுத்த டெஸ்ட் தொடர் 2025 கோடையில் இங்கிலாந்தில் நடக்கவுள்ளது.
2008 ஆம் ஆண்டு பல மூத்த வீரர்கள் விரைவாக ஓய்வு பெற்றதைப் போலவே, விரைவில் இந்திய அணியின் மூத்த வீரர்கள் ஓய்வு பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவுரவ் கங்குலி, விவிஎஸ் லட்சுமணன், அனில் கும்ப்ளே மற்றும் வீரேந்தர் சேவாக் போன்ற மூத்த வீரர்கள் 2008ஆம் ஆண்டில், தோனி தலைமையேற்ற பின்னர் ஓய்வு பெற்றமை குறிப்பிடத்தக்கது.