அஸ்வின் இடத்துக்கு அறிவிக்கப்பட்ட 26 வயது வீரர்... பிசிசிஜ எடுத்துள்ள தீர்மானம்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி சார்பாக தனுஷ் களமிறங்கி ஒரு போட்டியில் 44 ரன்களும் பந்துவீச்சில் ஒரு விக்கெட்டும் எடுத்திருந்தார்.
ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடருக்கு மத்தியில் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் இருந்து ஓய்வு பெற்றதால் இந்திய அணியில் ஒரு வீரர் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், அஸ்வினுக்கு பதிலாக அணியில் மாற்று வீரர்களாக இருக்கும் ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தருக்கு தான் வாய்ப்பு கிடைக்கும் என பார்க்கப்படுகின்றது.
இந்த நிலையில், மூன்றாவதாக ஒரு சுழற் பந்துவீச்சாளர் வேண்டும் என்பதற்காக பிசிசிஐ தற்போது மும்பையைச் சேர்ந்த 26 வயது வீரரான தனுஷ் கோட்டியானுக்கு அணியில் வாய்ப்பு வழங்கி உள்ளது.
இதனை அடுத்து வரும் தனுஷ் கோட்டியான் மெல்போர்னுக்கு செவ்வாய்க்கிழமை புறப்பட்டு செல்கிறார். இதுவரை33 முதல் தர போட்டிகளில் விளையாடி 101 விக்கெட்டுகளை தனுஷ் கொட்டியான் வீழ்த்திருக்கிறார்.
அவருடைய சராசரி வெறும் 25 என்ற அளவில் உள்ளதுடன், பேட்டிங்கில் 47 இன்னிங்ஸில் 1525 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் இரண்டு சதம், 13 அரை சதம் அடங்கும். இதில் அவருடைய சராசரி 41 ஆகும்.
அண்மையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி சார்பாக தனுஷ் களமிறங்கி ஒரு போட்டியில் 44 ரன்களும் பந்துவீச்சில் ஒரு விக்கெட்டும் எடுத்திருந்தார்.
அத்துடன், கடந்த 2023-24 ரஞ்சித் தொடரில் தொடர் நாயகன் விருதை வென்றிருந்தார். இதுபோன்று அண்மையில் நடைபெற்ற இராணி கோப்பையிலும் தனுஷ் கோட்டியான் முதல் இன்னிங்ஸ் 64 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 24 ரன்களும் எடுத்திருந்தார்.
தனிப்பட்ட காரணங்களால் இந்த தொடரில் அக்சர் பட்டேல் சேர்க்கப்படவில்லை. தற்போது தனுஷ் கோட்டியானுக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது.