70 டெஸ்ட்களில் கோலியின் சாதனையை காலி செய்த ஜடேஜா.. அடுத்து சச்சினை நோக்கி!

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது போட்டியில் இந்திய அணி வீரர் ஜடேஜா 112 ரன்களும், 7 விக்கெட் களையும் கைப்பற்றி அசத்தியிருக்கிறார்.

70 டெஸ்ட்களில் கோலியின் சாதனையை காலி செய்த ஜடேஜா.. அடுத்து சச்சினை நோக்கி!

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது போட்டியில் இந்திய அணி வீரர் ஜடேஜா 112 ரன்களும், 7 விக்கெட் களையும் கைப்பற்றி அசத்தியிருக்கிறார்.

35 வயதான ஜடேஜா பில்டிங்கில் இளம் வீரர்களுக்கு சவால் விடுக்கும் வகையில் உள்ளதுடன், வெறும் 70 டெஸ்ட் போட்டிகள் மட்டுமே விளையாடி இருக்கும் ஜடேஜா நான்கு சதம், 20 அரை சதம் அடங்கலாக 3005 ரன்கள் குவித்துள்ளார்.

பந்துவீச்சில் 287 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளதுடன்,  24.14 என்ற அளவில் சராசரி வைத்து உள்ளார்.

இந்த நிலையில், இன்னும் 13 விக்கெட்டுகளை வீழ்த்தினால் 300 விக்கெட்டுகளை தொட்ட வீரர் என்ற சாதனையை ஜடேஜா படைப்பார். 

அத்துடன், 70 டெஸ்ட் போட்டியில் விளையாடி விராட் கோலி கும்ப்ளே போன்றவர்களின் சாதனைகளை சமன் செய்து இருக்கிறார். அதாவது இந்திய அணிக்காக அதிக முறை ஆட்டநாயகன் விருது வாங்கியவர்கள் பட்டியலில் ஜடேஜா தற்போது மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 

கும்பளே 132 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி பத்து முறை ஆட்டநாயகன் விருதை வென்றிருக்கிறார். கோலி 113 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 10 முறை ஆட்ட நாயகன் விருதை வென்றுள்ளார். ஆனால் ஜடேஜா வெறும் 70 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 10 முறை ஆட்ட நாயகன் விருதை வென்றுள்ளார். 

ராகுல் டிராவிட் 163 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 11 முறை ஆட்டநாயகன் விருதை வென்று இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

சச்சின் டெண்டுல்கர் 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 14 முறை ஆட்டநாயகன் விருதை வென்று முதல் இடத்தில் உள்ளார்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp