ஜடேஜாவுக்கு  இடமில்லை.. புதிய ஆல்-ரவுண்டர் தயார்... ரோஹித் வைத்த செக்!

அவரே அதிக ஓவர்கள் வீசி விக்கெட்களும் வீழ்த்தியதுடன், ஜடேஜாவுக்கு மொத்தமே மூன்று ஓவர்களே பந்து வீச வாய்ப்பு அளிக்கப்பட்டது. 

ஜடேஜாவுக்கு  இடமில்லை.. புதிய ஆல்-ரவுண்டர் தயார்... ரோஹித் வைத்த செக்!

டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் மூன்று குரூப் போட்டிகளில் நான்கு வேகப் பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியதுடன், ஒரே ஒரு சுழற் பந்துவீச்சாளர் மட்டுமே தேவை என்ற நிலை இருந்தது.

இந்திய அணியில் இரண்டு சுழற் பந்துவீச்சாளர்கள் இடம் பெற்ற நிலையில், ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் பட்டேல் என இருவருமே ஆல் ரவுண்டர்கள் என்ற நிலையில் கேப்டன் ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜாவை அழைக்காமல் அக்சர் பட்டேலை பந்து வீச அழைத்தார்.

மூன்று போட்டிகளிலும் அவரே அதிக ஓவர்கள் வீசி விக்கெட்களும் வீழ்த்தியதுடன், ஜடேஜாவுக்கு மொத்தமே மூன்று ஓவர்களே பந்து வீச வாய்ப்பு அளிக்கப்பட்டது. 

பேட்டிங்கில் ஜடேஜா மற்றும் அக்சர் பட்டேல் ஏழு மற்றும் எட்டாவது வரிசையில் தான் இடம்பிடித்ததுடன், பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா அக்சர் பட்டேலை நான்காம் வரிசையில் ஆட அழைத்தார். 

ரவீந்திர ஜடேஜாவும் இடதுகை பேட்ஸ்மேன் தான் என்பதுடன்,  அக்சர் பட்டேலை விட அதிக அனுபவம் வாய்ந்தவர் என்றாலும், அக்சர் பட்டேலை தான் ரோஹித் அழைத்தார்.

இதன் மூலம் ரவீந்திர ஜடேஜாவை ரோஹித் ஒதுக்கத் தொடங்கி இருக்கிறார் என்பது தெளிவாக தெரிவதுடன்,  டி20 உலகக் கோப்பை தொடருக்கு பின் ரவீந்திர ஜடேஜா டி20 அணியில் இருந்து மொத்தமாக விலக்கப்படுவார் எனவும் கூறப்படுகிறது. 

வெஸ்ட் இண்டீஸ்-இல் நடக்க உள்ள சூப்பர் 8 சுற்றில் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான சூழ்நிலை இருக்கும் என்ற நிலையில் அப்போதாவது ஜடேஜாவுக்கு பந்து வீச வாய்ப்பு கிடைக்குமா என்ற சந்தேகமும் காணப்படுகின்றது.

தற்போது பிளேயிங் லெவனில் இருக்கும் மூன்று முழு நேர வேகப் பந்துவீச்சாளரில் சிராஜை நீக்கி விட்டு குல்தீப் யாதவை அணியில் சேர்க்க இந்திய அணி திட்டமிட்டு இருக்கிறது.

அதனால், ஹர்திக் பாண்டியா உட்பட மூன்று வேகப் பந்துவீச்சாளர்களும், மூன்று சுழற் பந்துவீச்சாளர்களும் அணியில் இருப்பார்கள் என்ற நிலையில், ஒரு பந்துவீச்சாளருக்கு குறைந்த ஓவர்களே வந்து வீச வாய்ப்பு கிடைக்கும். 

எனவே, சூப்பர் 8 சுற்றிலும் ஜடேஜாவை பெயரளவுக்கு அணியில் சேர்த்து ரோஹித் சர்மா மாற்றி விடுவாரோ என்ற சந்தேகம் உள்ளதுடன், ஜடேஜாவின் இடத்தை அக்சர் பட்டேல் பிடித்து விட்டார் என்று பேசப்படுகின்றது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp