பாகிஸ்தான் அணி செய்த படுமோசமான சாதனை... கிரிக்கெட் சரித்திரத்தில் இப்படி நடந்ததே இல்லை!

கடந்த 2022 ஆம் ஆண்டு ராவல்பிண்டி மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 579 ரன்கள் குவித்தது. 

பாகிஸ்தான் அணி செய்த படுமோசமான சாதனை... கிரிக்கெட் சரித்திரத்தில் இப்படி நடந்ததே இல்லை!

பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து  கிரிக்கெட் வரலாற்றிலேயே எந்த அணியும் செய்யாத மோசமான சாதனையை படைத்துள்ளது.

ராவல்பிண்டி மைதானத்தில் நடந்த வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்துள்ள நிலையில், இதே மைதானத்தில் நடந்த முந்தைய டெஸ்ட் போட்டியிலும் தோல்வியை தழுவியது.

கடந்த 2022 ஆம் ஆண்டு ராவல்பிண்டி மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 579 ரன்கள் குவித்தது. 

பாகிஸ்தான அணி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமாக பந்து வீசி வெற்றி பெற்றது.

அதேபோன்று, வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 448 ரன்கள் எடுத்தவுடன் பாகிஸ்தான் அணி டிக்ளர் செய்தது. 

இதனையடுத்து, வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 565 ரன்கள் குவித்து அதிர்ச்சி அளித்ததுடன், இரண்டாம் இன்னிங்ஸில் பாகிஸ்தான் 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தது. 

30 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் வங்கதேச அணி விக்கெட் இழக்காமல் அந்த சிறிய இலக்கை எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த தோல்வியுடன், கடந்த 1294 நாட்களாக பாகிஸ்தான் அணி தங்களின் சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும், கடந்த மூன்று ஆண்டுகளில் பாகிஸ்தான் அணி தங்களின் சொந்த மண்ணில் 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி கூட பெறவில்லை.

இதுவரை பாகிஸ்தானுக்கு எதிராக வங்கதேச அணி வென்றதில்லை என்பதால் பாகிஸ்தான் அணி இந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரண்டு வெற்றிகளை பெற்று வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp