நடுவரிடம் சண்டை போட்ட ரிக்கி பாண்டிங்.. களத்தில் என்ன நடந்தது?
ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது. முதல் இடத்தில் சிஎஸ்கே அணி நல்ல ரன் ரேட்டில் தொடர்ந்து வருகிறது.
நடந்து முடிந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் பிளேயிங் லெவனில் வெளிநாட்டு வீரர்களாக ஜோஸ் பட்லர், சிம்ரன் ஹெட்மையர் மற்றும் டிரண்ட் போல்ட் என மூன்று பேர் இடம் பெற்றிருந்தார்கள்.
இதில் இம்பேக்ட் பிளேயருக்காக பேட்டிங் செய்கையில் தேவைப்பட்டால் இன்னொரு வெளிநாட்டு வீரருக்கான இடத்தில் ரோமன் பவலையும், கூடுதல் பேட்ஸ்மேன் தேவைப்படாவிட்டால் பந்துவீச்சாளராக நன்ட்ரே பர்கரையும் வைத்திருந்தார்கள்.
இந்த நிலையில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரவிச்சந்திரன் அஸ்வினை நடுவில் பேட்டிங்கில் பயன்படுத்தி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 185 ரன்கள் குவித்தது.
இதன் காரணமாக அந்த அணிக்கு இம்பேக்ட் பிளேயர் இடத்தில் கூடுதல் பேட்ஸ்மேன் வெளிநாட்டு வீரரான ரோமன் பவல் தேவைப்படவில்லை. இதன் காரணமாக பந்துவீச்சின் போது வெளிநாட்டு வேத பந்துவீச்சாளர் நன்ட்ரே பர்கரை இம்பேக்ட் பிளேயராக கொண்டு வந்தார்கள்.
ராஜஸ்தான் ராயல் அணி இரண்டு ஆட்டங்களாக புத்திசாலித்தனமாக இம்பேக்ட் பிளேயரை பயன்படுத்தி வருகிறது. இந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீசி கொண்டிருந்த பொழுது, ரோமன் பவல் சப்சிடியூட் வீரராக பீல்டிங் செய்வதற்கு உள்ளே வந்திருந்தார்.
இதுதான் டெல்லி கேப்பிடல் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் நடுவரிடம் சண்டை இட வைத்தது. காரணம் என்னவென்றால், ஏற்கனவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நான்கு வெளிநாட்டு வீரர்களை பிளேயிங் லெவனில் பயன்படுத்தி விட்டது.
இதையும் படிங்க : ஹர்திக் பாண்டிய சறுக்கியது எங்கு தெரியுமா? தோல்விக்கு காரணம் இதுதான்.. இனி ரோகித்?
இந்த நிலையில் ஐந்தாவது வீரராக ரோமன் பவல் எப்படி உள்ளே வர முடியும் என்று? ரிக்கி பாண்டிங் மிகவும் ஆக்ரோஷமாக கள நடுவரிடம் வாக்குவாதம் செய்தார். ஆனால் இந்த விஷயத்தில் அவருடைய கோபமும் வாதமும் அர்த்தமே இல்லாதது என்பதுதான் உண்மை.
ஏனென்றால் இம்பேக்ட் பிளேயராக நான்கு வீரர்களை நாம் கொடுக்க முடியும். அதிலிருந்து ஒரு வீரரை நாம் இம்பேக்ட் பிளேயராக பயன்படுத்திக் கொள்ள முடியும். மீதம் இருக்கும் மூன்று வீரர்களில் இருந்து யாரை வேண்டுமானாலும் நாம் பீல்டிங் செய்யும் பொழுது சப்சிடியூட் ஃபீல்டராக உள்ளே கொண்டு வரலாம்.
அது இந்திய வீரராகவும் இருக்கலாம் வெளிநாட்டு வீரராகவும் இருக்கலாம். ஆனால் இந்த விதி புரியாமல் ரிக்கி பாண்டிங் நடுவரிடம் சண்டையிட, பிறகு அவர்கள் விளக்கி சொல்ல அவர் சமாதானம் அடைந்தார். ரிக்கி பாண்டிங் என்றாலே ஆக்ரோஷம் என்பது பயிற்சியாளரான பிறகும் தொடர்கிறது குறிப்பிடத்தக்கது.