உச்சம் தொட்ட ரிங்கு சிங்... நினைத்துக் கூட பார்க்க முடியாத சாதனை!
மூன்றாவது இடத்தில் ரோஹித் சர்மா (201), நான்காவது இடத்தில் விராட் கோலி (192) மற்றும் ஐந்தாவது இடத்தில் யுவராஜ் சிங் (180) ஆகியோர் உள்ளனர்.
ஜிம்பாப்வே அணியுடனான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணியின் ரிங்கு சிங், 22 பந்துகளில் 48 ரன்கள் குவித்து கதிகலங்க வைத்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 218 ஆக இருந்தது.
இந்த நிலையில், இந்திய பேட்ஸ்மேன்களிலேயே 16 வது ஓவர் முதல் 20 வது ஓவர்கள் வரையிலான டெத் ஓவர்கள் எனப்படும் கடைசி ஐந்து ஓவர்களில் அதிக ஸ்ட்ரைக் ரேட் கொண்ட வீரர்களின் பட்டியலில் ரிங்கு சிங் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.
கடைசி 5 ஓவர்களில் குறைந்தது 250 ரன்கள் குவித்த வீரர்களை பார்த்தால், அதில் அதிக ஸ்ட்ரைக் ரேட் உள்ள வீரர்களின் பட்டியலில் சூர்யகுமார் யாதவ் முதல் இடத்தில் இருக்கிறார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 228 ஆகும். அடுத்த இடத்தில் ரிங்கு சிங் இருக்கிறார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 221.5 ஆகும்.
மூன்றாவது இடத்தில் ரோஹித் சர்மா (201), நான்காவது இடத்தில் விராட் கோலி (192) மற்றும் ஐந்தாவது இடத்தில் யுவராஜ் சிங் (180) ஆகியோர் உள்ளனர்.
கடந்த போட்டியில் டக் அவுட் ஆகி இருந்த ரிங்கு சிங், இரண்டாவது போட்டியில் கடைசி 2 ஓவர்களில் மட்டும் அவர் நான்கு சிக்ஸ் அடித்தது அதிரடி ஆட்டம் ஆடி தனது திறமையை நிரூபித்திருக்கிறார்.
கடைசி 5 ஓவர்களில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலை எடுத்து பார்க்கும் போது அதில் விராட் கோலி 1032 ரன்கள் உடன் முதல் இடத்திலும், தோனி 1014 ரன்கள் உடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.
தோனி கடைசி ஐந்து ஓவர்களில் குவித்த ரன்களின் ஸ்ட்ரைக் ரேட் 152 மட்டுமே. அவரது ஸ்ட்ரைக் ரேட் குறைவாக இருந்தாலும், அவர் அதிக ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.